காலம் எவ்வளவு வலிமையானது.. எடப்பாடியின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் ஜேசிடி பிரபாகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலம் எவ்வளவு வலிமையானது பாருங்கள்.. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுடன் ஜே சி டி பிரபாகர் இருந்தார் .. அப்போது ஜே சி டி பிரபாகர் அவர்களை அதிமுகவில் உறுப்பினராக கூட சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி அனுமதிக்கவில்லை... ஆனால் இன்று யார் அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவர் என்று தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அதே ஜேசிடி பிரபாகரிடம் இருக்கிறது என்று நெட்டிசன் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் செங்கோட்டையன் இணைந்த சிலநாளில் ஓபிஎஸ் அணியில் இருந்த ஜே.சி.டி.பிரபாகரும் தவெகவில் இணைந்தார். முன்னதாக ஜேசிடி பிரபாகர் அதிமுகவில் எம்ஜிஆர் காலத்திலிருந்தே பணியாற்றியவர், ஓபிஎஸ் ஆதரவாளராகவும், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழுவிலும் தீவிரமாகச் செயல்பட்டார். ஆனால் கடந்த ஜனவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் சென்னையில் தன் ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், தமிழ்நாட்டின் சட்டமன்றப் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tamil Nadu Speaker JCD Prabhakar who is set to determine Edappadi Palaniswami s future

முன்னதாக தவெகவில் ஜேசிடி பிரபாகர் இணைந்த போது, எந்த பதவியும் விஜய்க்கு வழங்கவில்லை.. ஜனவரி மாதம் தவெகவில் இணைந்த போது பேசிய ஜேசிடி பிரபாகர் , "நான் முதன் முதலில் எம்ஜிஆரை பார்த்தபோது எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்ததோ, அந்த அளவுக்கு விஜய் மீது நம்பிக்கை இருக்கிறது. விஜய் தமிழகம் முழுவதும் அமைதி புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார். வீடுதோறும் விஜய் முழக்கமாக இருக்கிறது. ஜெயலலிதா புகழை எடுத்துரைக்க தடையில்லாத இயக்கமாக தவெக இருக்கிறது.

தவெகவில் பொறுப்பு இல்லாவிட்டாலும், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்கிற நம்பிக்கையில் நான் கட்சியில் இணைந்திருக்கிறேன். இனியும் கட்சியினர் பலர் இணைவர்கள்" என்று கூறியிருக்கிறார்.

ஜேசிடி பிரபாகர் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் 1980 மற்றும் 2011 என இரண்டு சட்டமன்ற தேர்தல்களில், அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஜே.சி.டி.பிரபாகர். திமுகவின் கோட்டையான ஆயிரம் விளக்கு தொகுதியில் வென்று தான் சபாநாயகர் ஆகி உள்ளார்.

ஒரு காலத்தில் ஓ பன்னீர்செல்வத்துடன் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்ட்ட போது, மறுபடியும் அதிமுகவில் இணைய முயற்சி செய்தாராம் ஜேசிடி பிரபாகர்.. ஆனால் ஓ பன்னீர்செல்வத்தை எப்படி கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி மறுத்தாரோ, அதேபோல் தான் ஜேசிடி பிரபாகரையும் சேர்க்கவில்லை. எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா தன்னை விமர்சித்தவர்களை எல்லாம் கட்சியில் சேர்த்து அவர்களை தனக்கு விசுவாசமானவர்களாக மாற்றுவார்.. அதுபோல் எடப்பாடி பழனிசாமி செயல்படவில்லை. அதுவே இப்போது அவருக்கு சிக்கலாக்கி உள்ளதாக கூறுகிறார்கள்.

இதுபற்றி நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், காலம் எவ்வளவு வலிமையானது பாருங்கள்.. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுடன் ஜே சி டி பிரபாகர் இருந்தார் .. அப்போது ஜே சி டி பிரபாகர் அவர்களை அதிமுகவில் உறுப்பினராக கூட சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி அனுமதிக்கவில்லை... ஆனால் இன்று யார் அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவர் என்று தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அதே ஜேசிடி பிரபாகரிடம் இருக்கிறது என்று நெட்டிசன் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+