தீபாவளி முடிந்து.. சென்னைக்கு திரும்புறீங்களா? உங்களுக்கு குட் நியூஸ்.. அரசின் சர்ப்ரைஸ் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். சென்னையில் இருந்து பலரும் சொந்த மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளனர். இன்றும் அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இதனால் பெரும்பாலான மக்கள் இன்றும் சொந்த ஊர்களில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தீபாவளி தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ளது.

தீபாவளிக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று உள்ளனர். சென்னை பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் இதனால் கடந்த வாரம் அலைமோதியது..
சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் சிரமமின்றி பயணிப்பதாக பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் பலரும் எளிதாக சொந்த ஊர்களுக்கு திரும்ப முடிந்தது. இந்த முறை பேருந்து நிலையங்களில் பெரிய அளவில் நெருக்கடி இல்லை. கூட்டம் இருந்தாலும் கடுமையான நெருக்கடி இல்லை.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 16,895 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த பேருந்துகள் மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை, கோவை, ஓசூர் போன்ற நகரங்களுக்கு திரும்பி செல்லும் என்றும் கூறப்படுகிறது.
தீபாவளிக்கு மறுநாள்: இந்த நிலையில்தான் தீபாவளி தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி சென்னையில் இன்று.. 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மாநகர பேருந்து சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் 60 மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு பேருந்துகள் உள்ளன. இது சென்னை நகரம் உள்ளே இயங்கும் பேருந்துகள் ஆகும்.
தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மக்கள் எளிதாக வீடுகளுக்கு செல்ல.. இரவு நேரங்களில், அதிகாலை வேளைகளில் எளிதாக பயணம் செய்ய இந்த பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சிறப்பு பேருந்துகளில் சொகுசு பேருந்து கட்டணம் வசூலிக்க போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பயண சீட்டுகள் 100% அதிகப்படுத்தியும் இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் உரிய வழித்தட பெயர் பலகை சரிவரப் பொருத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள மண்டல கிளை மேலாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குநர் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

.
உதவி எண்கள்: தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மக்களின் பாதுகாப்பை கருதி இந்த எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண்-(149) செயல்பாட்டில் உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications