தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு நாளை முதல் கப்பல் போக்குவரத்து- 2 மணிநேர பயணம்- ரூ.5,000 கட்டணம்!
சென்னை: தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு நாளை முதல் கப்பல் போக்குவரத்து இயக்கப்படுவது உறுதியாகி உள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் பயணிகள் கப்பல் பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தை சென்றடையும். நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் செல்வதற்காக ஒருவழிப் பயண எக்கானமி கட்டணம் ரூ. 4,997; பிரீமியம் எக்கானமி கட்டணம் ரூ.7,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து பல முறை மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த கப்பல் போக்குவரத்து பல்வேறு காரணங்களால் அவ்வப்போது நிறுத்தப்பட்டு விடுவது வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில் நாகப்பட்டினம் - யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அந்தமானில் இருந்து சிவகங்கை என்ற கப்பல் வரவழைக்கப்பட்டு சோதனை ஓட்டமும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென இந்த அறிவிப்பில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 16-ந் தேதி -நாளை காலை 10 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் புறப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் இந்த கப்பல் பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை சென்றடையும். ஒருவழிப் பயண கட்டணமாக எக்கானமி பிரிவில் ரூ.5,000; பிரீமியர் எக்கானமி பிரிவில் ரூ. 7,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாளை மறுநாள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நாகப்பட்டினத்தை பயணிகள் கப்பல் வந்தடையும்.
இதன் பின்னர் ஆகஸ்ட் 18-ந் தேதி முதல் நாள்தோறும் நாகப்பட்டினத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த கப்பல் பகல் 12 மணிக்கு இலங்கையை சென்றடையும். பின்னர் இலங்கையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகப்பட்டினத்தை வந்தடையும்.
இலங்கைப் பயணம் மேற்கோள்வதற்காக www.sailindsri.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்!











Click it and Unblock the Notifications