மிகப்பெரிய சாதனை படைக்க போகும் தமிழ்நாடு.. 100% இலக்கை அடையும் மாநிலம்.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டை முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்க பிரகாசமான வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் அனைத்து 38 மாவட்டங்களிலும் 2022-23-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2025-26ஆம் ஆண்டிற்கு ஒன்றிய கல்வி அமைச்சக திட்ட ஒப்புதல் குழுவின் அறிக்கையின்படி. 15,00,309 எழுதப் படிக்கத் தெரியாதோர் எண்ணிக்கை இலக்காக நிர்ணயிக்கப்பட்டு கற்போர்களை முழுமையாகக் கண்டறிந்து அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவோடு வாழ்வியல் திறன்களைக் கற்கும் வாய்ப்பை வழங்கிடும் வகையில் முதற்கட்டமாக 5,37.869 கற்போர்கள் கண்டறியப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு 15.06.2025 அன்று அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு எழுத்தறிவு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 9,63,169 கண்டறியப்பட்டு 39,250 எழுத்தறிவு மையங்களில் சேர்க்கப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்பட்டு 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டது.

இவ்வாண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 15,00,309 கற்போர்களை விட கூடுதலாக 733 தேர்வு எழுதியுள்ளனர். இத்தேர்வுப் பணியில் 39,250 தன்னார்வலர்கள். 40,000 ஆசிரியர்கள். 3500 ஆசிரியர் பயிற்றுநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள். வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட உதவித் திட்ட அலுவலர்கள் உட்பட 800 அலுவலர்கள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இத்திட்டத்தினைப் பொறுத்தவரை, மாநிலத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதை எதிர்நோக்கி செயல்படுத்தப்பட்டது. இத்தேர்வின் தேர்ச்சி முடிவுகள் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட பின்னர் தமிழ்நாட்டை முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்க பிரகாசமான வாய்ப்புள்ளது.
புதிய கல்வி முறை
சமீபத்தில்தான் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரபூர்வமாக வெளியிட்டார். இதில் ஓபன் புக் தேர்வு முறை எனப்படும் திறந்த புத்தகத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை, மாநிலத்தின் கல்வி முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டில், ஓய்வுபெற்ற நீதிபதி டி. முருகேசன் தலைமையில் 14 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் முக்கியப் பணி, தமிழ்நாட்டுக்கான ஒரு தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்குவதாகும். கல்விக் கொள்கையை வடிவமைக்கும் பணிகளில், பல்வேறு தரப்பினரின் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் துணைவேந்தர்கள், அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையில் உள்ள நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.
தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை
இந்த விரிவான ஆய்வுக்குப் பிறகு, குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், தற்போது மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநிலக் கல்விக்கொள்கை (SEP) தமிழ்நாட்டின் தனித்தன்மையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், "இந்தக் கல்விக்கொள்கை மூலம் மாணவர்கள் மனப்பாடம் செய்வதை விட, சிந்தித்துப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். உடற்கல்வி படிப்போடு இணைந்திருக்கும். முக்கியமாக, நாங்கள் இருமொழிக் கொள்கையை உறுதியாகப் பின்பற்றுவோம், இது எங்கள் உறுதியான கொள்கை என்பதைத் திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகிறேன்" என்றார்.
புதிய மாநிலக் கல்விக்கொள்கையின் கீழ் ஸ்மார்ட் வகுப்பறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். "கல்வியில் ஒரு மாற்றத்தை உருவாக்கப் போகிறோம். எல்லோருக்கும் கல்வி அளிப்பதே எங்கள் நோக்கம். யாரும் பின்தங்கக் கூடாது" என்று கூறிய ஸ்டாலின், கல்வியில் பகுத்தறிவைப் போதிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் திறந்த புத்தகத் தேர்வு முறை
இதில் ஓபன் புக் தேர்வு முறை எனப்படும் திறந்த புத்தகத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை, மாநிலத்தின் கல்வி முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மாநிலக் கல்விக்கொள்கை, திறந்த புத்தகத் தேர்வுகளை பள்ளிக்கல்வியில் ஒரு அம்சமாக கொண்டு வர பரிந்துரைத்துள்ளது. இது வெறும் மனப்பாடம் செய்வதைக் குறைத்து, புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வழக்கமான தேர்வுகளில் கூட, மாணவர்கள் தரவு மற்றும் சூத்திரங்களுக்கான தகவல் தாள்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்களிடம் தேர்விற்கு என்று தனி reference புத்தகம் ஒன்று வழங்கப்படும். அதை பார்த்து, புரிந்து தேர்வு எழுத முடியும்.
திறந்த புத்தகத் தேர்வு என்றால் என்ன?
இந்தத் தேர்வு முறையில், மாணவர்கள் தேர்வு எழுதும்போது பாடப்புத்தகங்கள், குறிப்புகள் அல்லது பிற அனுமதிக்கப்பட்ட புத்தக குறிப்புகளை தேர்வு எழுத பயன்படுத்தலாம். இதன் முதன்மை நோக்கம் தகவல்களை மனப்பாடம் செய்வதிலிருந்து விலகி, அவற்றை திறம்பட கண்டறிந்து, புரிந்துகொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் பயன்படுத்துவதாகும். கேட்க எளிதாக இருந்தாலும் இதை செய்வது கடினம்.. அதோடு இது மனப்பாடத்தை நம்பாமல் புரிந்து படிக்க உதவும்.












Click it and Unblock the Notifications