இனி ஈஸியா பயணிக்கலாம்.. வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிடிஆர்.. குட்நியூஸ்

இதன் மூலம் இனி போக்குவரத்து எளிதாகும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 5140 கிமீ சாலைகளை மேம்படுத்த ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்து உள்ளார். இதன் மூலம் மக்கள் எளிதாக கார், பைக்குகளில் பயணம் மேற்கொள்ளப்படும், என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

வருவாய் பற்றாக்குறை கடந்த ஆட்சியில் 62 ஆயிரம் கோடியாக இருந்தது. இதை 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்து உள்ளோம். கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு மாற்றத்தை செய்து இருக்கிறோம் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

பட்ஜெட்

பட்ஜெட்

அவர் தனது பட்ஜெட்டில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதுமை பெண் திட்டத்தால் உயர்கல்வி பயிலும் மாணவிகள் எண்ணிக்கை 29% அதிகரித்து உள்ளது, 2.2 லட்சம் மாணவிகளுக்கு ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மீன்பிடி தடைக்காலத்தில், மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6,000 ஆயிரம் வழங்க ரூ. 389 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரிக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.434 கோடியில் வெள்ள தடுப்பு பணி செயல்படுத்தப்படும். கடல் அரிப்பை தடுக்க, கடல் மாசுபாட்டை குறைக்க ₹2000 கோடி மதிப்பீட்டில் 'தமிழ்நாடு நெய்தல் மீட்சித்திட்டம்' உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும். கோபி பகுதியில் தந்தை பெரியார் பெயரில் புதிய வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும்.4.3 லட்சம் மீனவர் நலத் திட்டங்களுக்கு ரூ389 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் பெயரில் நினைவு மண்டபம் அமைப்போம். ரூ. 5 கோடி மானியத்துடன் அம்பேத்கர் நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படும்.

சரணாலயம்

சரணாலயம்

ரூ. 25 கோடியில் மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் சரணாலயம் ஒதுக்கீடு செய்யப்படும். கட்டிட வரைபடங்களுக்கான அனுமதியை இணையம் மூலம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 5140 கிமீ சாலைகளை மேம்படுத்த ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்து உள்ளார். இதன் மூலம் மக்கள் எளிதாக கார், பைக்குகளில் பயணம் மேற்கொள்ளப்படும். மக்களின் பயணம் எளிதாகும், அதோடு வேகம் ஆகும். மாவட்ட நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை இதன் மூலம் விரிவாக்கப்படும்.

கோவை

கோவை

ரூ. 43 கோடியில் கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும். கோவையில் செம்மொழிப்பூங்கா 2 கட்டங்களாக அமைக்கப்படும். மண் சாலைகள் இருக்கும் இடங்களில் எல்லாம் தார் சாலைகள் போடப்படும். தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரங்கள் குளங்கள், நீர் நிலைகள் தூய்மைப்படுத்தப்படும். அடையாறு , கூவம் பகுதிகளை மறுசீரமைக்க ரூ. 1,500 கோடி செலவில் செயல்படுத்தப்படும். அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும், என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+