அசத்தலான மாற்றம்.. தமிழ்நாட்டிற்கு வரும் புதிய பேருந்துகள்.. இதுதான் கலர்.. மொத்தமாக மாறிடுச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக புனரமைக்கப்பட்ட பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விரைவு போக்குவரத்து பேருந்துகளில் இருக்கும் குறைகளை சரி செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் 200 புதிய படுக்கை மற்றும் இருக்கை வசதி பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளது

Tamil Nadu State Transport Corporation changing the color of the upgraded buses

இதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக புனரமைக்கப்பட்ட பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு உள்ளது. தற்போது சில்வர் - நீல நிறத்தில் இருக்கும் பேருந்துகள் வெள்ளை - மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டு உள்ளன. இந்த புதிய பேருந்துகளின் படங்களை @tnstcbus வெளியிட்டு உள்ளது. வெள்ளை - மஞ்சள் கலந்த உருவத்தில் இந்த பேருந்துகள் உள்ளன.

குறைபாடுகளை களைய முடிவு: இது பேருந்துகளில் உள்ள வசதி குறைபாடுகளை களைய ஆலோசனைகளை செய்து வருகின்றனர். நேரடியாக பேருந்து ஆர்வலர்கள், மக்களிடம் இருந்து தற்போது உள்ள மாண்புமிகு மேலாண் இயக்குனர் @tnstcbus குழு உள்ளிட்ட சமூக வலைதள வாயிலாக கருத்துகளை பெற முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக @tnstcbus குழு செய்துள்ள போஸ்டில்,

1. பேருந்துகளில் தலையணை உடனான படுக்கைகளை அமைத்தல் (Builtin Pillows on Sleeper)

2. யூஎஸ்பி சார்ஜர்களுக்கு பதிலாக சாதாரண சார்ஜிங் பாயிண்ட்களை அமைத்தல் (Conventional Charging ports Instead of easily damageable USB Charging points)

3. எளிதில் அழுக்கடையும் துணியாலான இருக்கைகளுக்கு பதிலாக ரெக்சின் இருக்கைகள் (Rexin seats instead of cloth ones).

போன்ற மாற்றங்களை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல்

1. இருக்கைகள், ஜன்னல்கள், வாசிப்பு விளக்குகளின் தரம் உறுதி செய்யப்பட வேண்டும்
2. பஸ்ஸின் உட்பக்கத்தை சுத்தம் செய்தல் குறிப்பாக ஜன்னல்கள் மற்றும் திரைகளை சுத்தம் செய்தல்
3. பேருந்துகள் செல்லும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்
4. மாநிலம் முழுவதும் கால அட்டவணை வெளியிடப்பட வேண்டும்.
5. அதிக எண்ணிக்கையிலான படுக்கை பேருந்துகள் மீது கவனம் செலுத்த முடிவு எடுக்கப்பட வேண்டும்.
6. ஏசி பேருந்துகளை அதிகரிக்க வேண்டும்.

போன்ற மாற்றங்களும் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன. அரசு விரைவு போக்குவரத்து கழகம் இல்லாமல் மாநில போக்குவரத்து கழகமும் புதிய பேருந்துகளை வாங்க உள்ளன.

அதன்படி, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சமீபத்தில் 450 டவுன் பஸ்களை வாங்குவதற்கு டெண்டர் எடுத்துள்ளது.பிரிவு வாரியாக ஒதுக்கப்பட்ட பேருந்துகளின் பட்டியல்

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் விழுப்புரம்- 82
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம்- 112
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சேலம்-44
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கோயம்புத்தூர்-52
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மதுரை-99
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி-61
மொத்தம்-450 பேருந்துகள் வாங்கப்பட்ட உள்ளது.

பேருந்துகள்: தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சிறப்பாக செயல்பட்டாலும் பேருந்துகள் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் அதிநவீன பேருந்துகள் போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.

ஆனால் தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக நவீன பேருந்துகள் வாங்கப்படுவது குறைவாகவே உள்ளது. கர்நாடகாவில் இருக்கும் அரசு விரைவு பேருந்துகள் வேற லெவல் தரத்தில் உள்ளன.

உதாரணமாக கர்நாடகாவின் ஐராவத் போன்ற பேருந்துகள் தனியாரை விட அதிக வசதி கொண்டதாக மக்கள் விரும்பும் விரைவு பேருந்துகளாக உள்ளன. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக விரைவு பேருந்துகளில் அதிரடி மாற்றங்களை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+