நிலப்பட்டா.. பத்திரப்பதிவு செய்யணுமா? நாளை காலை ரெடியா இருங்க.. தமிழக பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளையும் பத்திரப்பதிவு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், ஒரு மகிழ்ச்சி செய்தியை பதிவுத்துறை தற்போது வெளியிட்டிருக்கிறது.
தமிழக அரசின் மற்ற துறைகளை போலவே பத்திரப்பதிவு துறையும் ஆன்லைன்மயமாகிவிட்டது.. எனினும், ஒவ்வொரு வருடமும் வருவாய் இலக்கு நிர்ணயித்து, பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த வருடமும், ரூ.25,000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலக்கு நிர்ணயம்: இதற்காகவே, பல்வேறு அதிரடிகளையும், அறிவிப்புகளையும், வெளியிட்டு வருவதுடன், பொதுமக்களுக்கான சலுகைகளையும் வாரி வழங்கி வருகிறது.. அதன் ஒருபகுதியாக, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
வழக்கமாக, ஒவ்வொரு நாளும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 100 டோக்கன்கள் விநியோகிக்கப்படும். ஆனால் முகூர்த்த நாட்களில் மட்டும், பத்திரப்பதிவு சற்று அதிகமாகவே நடக்கும் என்பதால், அந்த நாட்களில் கூடுதலாக டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
விசேஷ நாட்கள்: அதேபோல, சில விடுமுறை நாட்களிலும் கூடுதல் பத்திரப்பதிவை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததால், அதற்கேற்றபடியும் விசேஷ டோக்கன்கள் கூடுதலாக விநியோகிக்கப்படுகின்றன.
இந்நிலையில், நிதியாண்டு முடியப்போவதால் திடீர் குழப்பம் ஒன்று தற்போது வந்துவிட்டது. வழக்கமாக நிதியாண்டு மார்ச் 31ல் சனிக்கிழமையில் வந்தால், அந்த நாளில் சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது.. அதனால், மார்ச் 30ம் தேதியான சனிக்கிழமையன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
எதிர்பார்ப்பு: இப்போதைக்கு மொத்தமுள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்களில், சனிக்கிழமைகளில் மட்டும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன.. அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் மார்ச் 30ம் தேதி அன்று இயங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதால், பதிவுத்துறை தலைவர் இதுகுறித்து என்ன முடிவெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்தது.
காரணம், மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் 1 என்று வரிசையாக 3 நாட்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும்.. அதுவும் இல்லாமல், நிதியாண்டின் இறுதி நாட்கள் என்பதால் ஏராளமானோர் பத்திரப்பதிவுக்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள்.. ஒரு வேளை மார்ச் 30ல் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படாமல் போனால், அரசுக்கு கணிசமான வருவாய் பாதிப்பும் ஏற்படும் நெருக்கடியும் உள்ளது.. அதனால்தான் பதிவுத்துறையின் முடிவு ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
சார்பதிவாளர்: இந்நிலையில், மார்ச் 30ம் தேதி, சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும் என்றுஅதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இந்த நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 30-ம்தேதி சனிக்கிழமையன்று, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இயங்கும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். பதிவுத்துறை தலைவர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட சுற்றறிக்கை இதுதான்:
"பொது மக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் வருவாயை பெருக்கும் நோக்கிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் 2023-24ம் நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் கடைசி சனிக்கிழமையான 30ம் தேதி மட்டும் ஏற்கனவே தற்போது சனிக்கிழமைகளில் இயங்கிவரும் 100 சார்பதிவகங்களுடன் இதர அனைத்து சார்பதிவகங்களும் செயல்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள்: எனவே, மார்ச் 30ம் தேதி சனிக்கிழமை அனைத்து சார்பதிவகங்களும் வழக்கம்போல் காலை 10 மணி முதல் ஆவண பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு உரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் தவிர பதிவு விதி 4க்கு உட்பட்டு பதிவுச் சட்டம் கீழுள்ள கட்டண அட்டவணையில் கூறப்பட்டவாறு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்பட வேண்டும்.
முன்பதிவு: மேலும் அன்றைய தினங்களில் ஸ்டார் 2.0 திட்டப்படி அனைத்து அலுவலகங்களிலும் பதிவுப் பணி இணையவழி தடையின்றி நடைபெற ஏதுவாக பொதுமக்களுக்கு முன் பதிவு செய்திடும் வசதி மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்களுக்கான உதவி மையம் மற்றும் உதவி எண் வசதி ஆகியவற்றை எவ்வித குறைபாட்டுக்கும் இடமின்றி உடன் ஏற்படுத்திட டிசிஎஸ் மென்பொறியாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுவதை கண்காணிக்கவும் கோரப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications