விட்டு வெளுக்கும் மின்சார வாரியம்.. மொத்தமாக 2 ஆக பிரிக்க முடிவு! இனி எல்லாமே மாறும்.. நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது 2ஆக பிரிக்கப்பட்டு உள்ளது. இனி மின்சார வாரிய பணிகள் பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் லண்டனில் இருந்து முக்கியமான டீம் ஒன்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அவர்களுக்கு சிறப்பு ப்ரொஜெக்ட் ஒன்றும் கொடுக்கப்பட உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை மனதில் வைத்து முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை வகுத்து உள்ளார். அதன்படி லண்டனில் இருக்கும் பிரபல கன்சல்டன்சி நிறுவனமான Ernst & Young நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி Ernst & Young நிறுவனம் தமிழ்நாட்டில் இருக்கும் 50 பொதுத்துறை நிறுவனங்களை ஆய்வு செய்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் ஆண்டு/காலாண்டு அறிக்கைகள், நடப்பு வருமான குறிப்புகள், இடைக்கால பொருளாதார அறிக்கைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் போக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். அந்த நிறுவனங்களின் பல்வேறு பொருளாதார அறிக்கைகளை வைத்து இந்த நிறுவனம் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
நிதி அமைச்சகத்தின் பிரிவான பொது நிறுவனங்களின் பணியகம் என்ற பிரிவுடன் இவர்கள் இணைந்து செயல்பட உள்ளனர். இந்த நிறுவனம் சமீபத்தில் மின்சார வாரியத்தில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வு முடிவில் மின்சார வாரியம் தொடர்பாக முக்கியமான பரிந்துரைகளை அந்த நிறுவனம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பரிந்துரை: அதன்படி மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 ஆக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது 3 நிறுவனங்களாக இதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் கடன் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த பரிந்துரை அறிக்கை இந்த கடன் நிலைமையை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
என்ன பரிந்துரை: மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளை கவனிக்கும் வகையில் தனி தனி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று இந்த பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு அரசுதான் இனி முடிவு எடுக்க வேண்டும். ஏற்கனவே சில மாநிலங்களில் மின்சார வாரியம் இப்படி 3 வகையாக பிரிந்து உள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் இதே ஐடியா கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) 2017 இல், மின்சார வாரியத்தை தனி விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்களாக பிரிக்க பரிந்துரைத்தது. ஆனால் அப்போது இந்த மாற்றம் செய்யப்படவில்லை.
டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் சில மாநிலங்கள் அவற்றின் மின் விநியோகம் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களின் பிரிவுக்குப் பிறகு சாதகமான முடிவுகளை பெற்றுள்ளன. அதாவது இந்த துறையை இரண்டாக பிரித்த பின் அவை சாதகமான முடிவுகளை பெற்றுள்ளன.டாங்கெட்கோவை மூன்று நிறுவனங்களாக மாற்றினால், அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி செழித்து திறம்பட செயல்பட முடியும். இதனால் உற்பத்தி அதிகரிக்கும். கடன் அடியோடு குறையும் என்றும் மின்சார துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இரண்டாக பிரிந்தது: அதன்படி முதல் கட்டமாக மின்சார வாரியம் இரண்டாக பிரிந்துள்ளது. மாநில மின் பயன்பாட்டு நிறுவனமான தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டாங்கேட்கோ) முறையாக இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அதன்படி பசுமை ஆற்றல் செயல்பாடுகளுக்காக ஒரு புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிலக்கரி மற்றும் எரிவாயு அடிப்படையிலான அனல் ஆலைகளின் பராமரிப்பு உற்பத்தி , உட்பட முழு செயல்பாடுகளையும் கவனித்துக் கொள்ளும், அதே நேரத்தில் TN பவர் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் சிறந்த நிர்வாகம் மற்றும் செயல்பாட்டுத் திறனுக்காக மீட்டர் மற்றும் பில்லிங் உள்ளிட்ட விநியோக நடவடிக்கைகளைக் கையாளும். இதற்கு இடையில் பசுமை ஆற்றல் செயல்பாடுகளுக்காக ஒரு புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications