இனி பிரச்சனையே இருக்காது.. தமிழ்நாடு மின்சார வாரியம் போட்ட செம ஆர்டர்.. மாநிலம் முழுக்க பறந்த உத்தரவு
சென்னை: வரும் மார்ச் மாதத்திற்குள் தமிழ்நாட்டிற்கு 2,640 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்கவுள்ளது. எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல (SEZ) அனல்மின் நிலையம் மற்றும் உடன்குடி அனல்மின் நிலையம் ஆகிய இரண்டும் முடியும் தருவாயில் உள்ளதால், கோடைக்கால மின் நெருக்கடியை சமாளிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வாயலூரில் அமைக்கப்பட்டு வரும் 1,320 மெகாவாட் (2x660 மெகாவாட்) எண்ணூர் SEZ அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்த ஆலையை மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் ஜே. ராதாகிருஷ்ணன், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் BHEL நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு மின்சாரம்
சுமார் ₹18,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, 2016 இல் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், திட்ட முடிவில் பல காலக்கெடு தவறவிடப்பட்டன.
இதேபோல், தூத்துக்குடியில் உள்ள 1,320 மெகாவாட் உடன்குடி அனல்மின் நிலையம் கடந்த வியாழக்கிழமை முதல்முறை வெற்றிகரமாக கிரிட் இணைப்பைப் பெற்றது. இது வணிகச் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
தமிழ்நாடு கோடை மின்சாரம்
அடுத்த கோடையில் தமிழ்நாட்டின் மின் தேவை 22,000 மெகாவாட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைச் சமாளிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் குறுகிய மற்றும் நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த உடன்குடி அனல்மின் நிலையம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மின் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"ஒவ்வொரு மின் நிலையத்திலும் ஒரு யூனிட் மின்சார விநியோகத்தைத் தொடங்கினாலும்கூட, இது ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். மின் சந்தைகளின் மீதான நம்பகத்தன்மை குறையும்" என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.
மின்சார இபி மீட்டர்
தமிழ்நாட்டில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் இந்த டெண்டரை எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக பல நிறுவனங்கள் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரில் ஈடுபட்டு உள்ளன . நுகர்வோர் நேரடியாக மீட்டர்களை வாங்க வசதியாக, தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இனி, பொதுமக்கள் மின்சார வாரியத்திடமிருந்து மட்டுமே மீட்டர் வாங்க காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கான விலைப்பட்டியலையும் மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. மீட்டர் பற்றாக்குறையால் மின் இணைப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இபி மீட்டர்
தொழில் நிறுவனங்கள், கடைகள், வீடுகள் என அனைத்து நுகர்வோரும் இந்த அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மீட்டர்களை வாங்கலாம். மீட்டர்களை வாங்கிய பிறகு, நுகர்வோர் அவற்றை நிறுவும் முன் டேம்பர்-ப்ரூஃப் செய்ய டாங்கேட்கோவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
டாங்கேட்கோ அதிகாரிகள் 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் மீட்டர்களை பொருத்துவார்கள். முன்னதாக, டாங்கேட்கோவே மீட்டர்களை கொள்முதல் செய்து, சோதனை செய்து மொத்தமாக விநியோகித்து வந்தது. இப்போது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மக்கள் நேரடியாக வாங்க முடியும்.
இருப்பினும், தற்போதைய மீட்டர் தட்டுப்பாடு புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை சரிசெய்யும் வகையில், இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படித்த நிலையில்தான் ததமிழ்நாட்டில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் இந்த டெண்டரை எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
ஸ்மார்ட் இபி மீட்டர்
அதன்படி, தாழ்வழுத்தப் பிரிவில் வரும் வீடுகள் மற்றும் கடைகளுக்கான மின் இணைப்பு 3 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, சிறிய டிரான்ஸ்பார்மர் போன்ற கூடுதல் சாதனங்கள் தேவையில்லாத பட்சத்தில், 3 நாட்களில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும். தேவைப்பட்டால், 7 நாட்களுக்குள் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதமே வெளியான இந்த அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
மேலும், மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள பகுதிகளுக்கு குறைந்த கட்டணமும், நிலத்தடி கேபிள்களுக்கு (UG) அதிக மேம்பாட்டுக் கட்டணமும் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC), அதிக கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இபி உற்பத்தி : மென்பொருள்
அதிகமாக வசூலிக்கப்பட்ட தொகையை நுகர்வோர் கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டும் அல்லது அவர்களின் அடுத்தடுத்த கட்டணங்களுடன் சரிசெய்ய வேண்டும் என்றும் TNERC உத்தரவிட்டது. இதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருள் உடனடியாக திருத்தப்பட வேண்டும் என்றும், தற்போதுள்ள முறைகளுடன் மேம்பாட்டுக் கட்டணங்களை மேலும் வசூலிக்க அனுமதிக்கப்படாது என்றும் ஆணையம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதுவரை வசூலிக்கப்பட்ட கூடுதல் மேம்பாட்டுக் கட்டணங்கள் விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாகத் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது முன்கூட்டியே நுகர்வுக் கட்டணமாகக் கருதப்பட்டு ஆணையத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications