தமிழகத்தில் இன்று 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு.. ட்விட்டரில் டிரெண்ட்டாகும் #TNThanksModiji
சென்னை: தமிழகத்தில் மட்டும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கிறார். இதையடுத்து #TNThanksModiji - என்ற ஹேஸ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில், ட்ரெண்டாகி வருகிறது.
தமிழகத்தில் நீலகிரி, திருவள்ளூர், விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட 11 அரசு மருத்துவ கல்லுாரிகளை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
விருதுநகர் மருத்துவ கல்லுாரியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், கொரோனா காரணமாக இது காணொலி நிகழ்ச்சியாக மாற்றியமைக்கப்பட்டது.
இன்று மாலை 4 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழக அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்கும் காணொளி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மருத்துவக்கல்லூரிகளைத் திறந்து வைக்கிறார்.

டிவிட்டரில் ட்ரெண்டிங்
தமிழகத்துக்கு 11 அரசு மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் திறந்துவைப்பதையடுத்து, பிரதமருக்கு நன்றி சொல்லி டிவிட்டரில் #TNThanksModiji ட்ரெண்டாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள். இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முன்னேரி வருகிறது இந்த ஹேஸ்டேக். ''ஒன்றல்ல இரண்டல்ல, தமிழ்நாட்டுக்கு 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொடுத்தார், இது எந்த அரசாங்கத்தாலும் நினைத்துப் பார்க்க முடியாதது'' என்று சொல்லி பா.ஜ.க-வினர் சந்தோஷமாக ட்வீட் செய்து வருகிறார்கள்.

11 மருத்துவக்கல்லூரி
தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். சுமார் 4,000 கோடி செலவில் நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரியில் 1450 மருத்துவ சீட் இருக்கிறது. இடங்களைக் கொண்டவை. தேவையில்லை பணம் நோட்டாக, தகுதியால் சேரலாம் நீட்டாக என்றும் மத்திய அரசின் 2145 கோடி நிதியில் நிதியில் இருந்து கட்டப்பட்டிருக்கும் மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்கும் பிரதமருக்கு நன்றி என புகைப்படத்துடன் நெட்டிசன்கள் பிரதமருக்கு நன்றி சொல்லி வருகிறார்கள்.

பின் தங்கிய மாவட்டங்களில்
தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரியும், தமிழகத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் இன்று திறந்துவைக்கிறார். அதோடு தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, அரியலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் என பின் தங்கிய மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் வரவிருப்பது மகிழ்ச்சி என்று பிரதமருக்கு நன்றி தெரிவித்துவருகின்றனர்.

திருவள்ளூரில் மருத்துவக்கல்லூரி
திருவள்ளூரில் அமைக்கப்படும் அரசு மருத்துவக்கல்லூரியின் எழில்மிகு புகைப்படத்தைப் பகிர்ந்து, இந்த மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை திறந்துவைக்கும் பிரதமருக்கு நன்றி என தெரிவித்திருக்கிறது திருவள்ளூர் பா.ஜ.க-வின் தெற்கு ஒன்றியம்.

செம்மொழி நிறுவனம்
தமிழ் மொழி மீதும் நம் கலாச்சாரத்தின் மீதும் நமது பிரதமரின் சிறப்புப் பாசத்திற்கு நன்றி. செம்மொழி நிறுவனம் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய நவீன வளாகத்தைப் பெறுகிறது. உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகம் பிரதமருக்கு நன்றி சொல்கிறோம் என செம்மொழி நிறுவனத்தின் புதிய வளாகத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து பிரதமருக்கு நன்றி சொல்லி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

மலையில் மற்றொரு மருத்துவக்கல்லூரி
நீலகிரியில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய மருத்துவக் கல்லூரியின் புகைப்படத்தைப் பகிர்ந்து பிரதமருக்கு நன்றி சொல்லி வருகிறார்கள். இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தில் மட்டும் தான் மலையில் மருத்துவக்கல்லூரி இருக்கிறது. அதற்கடுத்து, தற்போது தமிழகத்தில் அமைக்கப்படும் நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி தான் நாட்டிலேயே மலையில் அமையும் இரண்டாவது மருத்துவக்கல்லூரி. மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகள் அனைத்தும் சம தரையிலேயே இருக்கிறது. தமிழகத்தில் புதிதாகத் திறக்கப்படும் மருத்துவமனைகளுக்கு பிரதமருக்கு நன்றி சொல்லி 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டிவிட்டரில் #TNThanksModiji என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications