மேலே லாபி செய்த தலைகள்.. உறுதியாக நின்ற இறையன்பு.. ஸ்டாலினும் புல் சப்போர்ட்டாமே.. குலுங்கும் கோட்டை
கோட்டையில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை மிக ரகசியமாக வைத்துள்ளது முதல்வர் அலுவலகம்.
சென்னை: தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்புவின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில் அடுத்த தலைமை செயலாளர் யார் என்பது தொடர்பான தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இதனால் தலைமை செயலகமே பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறதாம்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருப்பவர் இறையன்பு. இவரது பிறந்த தேதி 16/6/1963. 1988 ஆம் வருட பேஜ் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்பு வருகிற ஜூன் மாதம் தனது பணியிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார்.
இதையடுத்து அவரின் மாநில தகவல் ஆணையத்தின் தலைவராக நியமிக்க போவதாக செய்திகள் வந்தன. அதே சமயம் மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக தன்னை நியமிக்க அவர் விண்ணப்பித்திருப்பதாகவும், அதனால் பிப்ரவரி 28-ந்தேதி வி.ஆர்.எஸ்.சில் அவர் ஓய்வு பெறப்போகிறார் என்றும் செய்திகள் ரெக்கைக் கட்டிப்பறந்தன.

செய்திகள்
இந்த செய்திகள் சில உயரதிகாரிகளால் திட்டமிட்டே பரப்பப்பட்டது என்பதுதான் நிஜம். மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவிக்கு இறையன்பு விண்ணப்பித்தது உண்மை. ஆனால், தனது பணி காலம் முறையாக முடிந்ததும், அதன் பிறகு தகவல் ஆணையத்தின் பதவி கிடைத்தால் ஓ.கே. ! அதேசமயம் இடையில் அந்த பதவி தனக்கு வேண்டாம் என முதலமைச்சரிடம் இறையன்பு ஏற்கனவே தெரிவித்து விட்டார். சில அதிகாரிகளால் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இறையன்பு. இந்த நிலையில், மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவியை நிரப்புவது தொடர்பாக, மார்ச் 3-ந்தேதி ஒரு ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது.

ரகசியம்
இதனை மிக ரகசியமாக வைத்துள்ளது முதல்வர் அலுவலகம். இந்த பதவிக்காக, இறையன்பு ஐ.ஏ.எஸ்.,
ஷகில் அக்தர் ஐ.பி.எஸ். உள்பட 6 பேர் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி காலியாக உள்ளது. பல ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் நடந்தும் கூட இந்த பொறுப்பிற்கு மட்டும் ஆணையர் நியமனம் நடக்கவே இல்லை. தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.ராஜகோபால் பதவிக்காலம் முடிந்தது. இவருக்கு கீழ் இயங்கிய தகவல் ஆணையர்களாக இருந்த எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலமும் மொத்தமாக முடிவிற்கு வந்தது. இவர்களின் பதவி மட்டும் நிரப்பப்படாமல் இருந்தது.

ஓய்வுபெற்ற அதிகாரிகள்
பொதுவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிதான் இந்த பொறுப்பிற்கு நியமனம் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது இந்த பதவிக்கு முக்கியமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனை கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இதற்காக ஒரு டீம் களமிறக்கப்படும். அதாவது ஒரு தலைமை ஆணையர் தேர்வு செய்யப்படுவார். அவருடன் 4 ஆணையர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்படுவார்கள். இது போக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள். இதில் ஆணையர் மற்றும் ஆணைய உறுப்பினர்களின் தேர்வுதான் இன்னும் நடக்கவில்லை. இதற்கான ஆலோசனைகள்தான் நடந்து வந்தன. இந்த குழுவில் இடம்பெற அனுபவம் கொண்ட தகுதியானவர்கள் பட்டியலை சமீபத்தில் தேர்வுக் குழு தலைவர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி டீம் தயார் செய்தது.

இறையன்பு
இந்த குழுவில் இடம்பெற அனுபவம் கொண்ட தகுதியானவர்கள் பட்டியலை சமீபத்தில் தேர்வுக் குழு தலைவர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி டீம் தயார் செய்தது. இறையன்பு பெயரும் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. வரும் மார்ச் 3ம் தேதி இதற்கான ஆலோசனைகள் நடக்க உள்ளன. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அன்று நடக்கும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த லிஸ்ட் பிடி தலைமை ஆணையர் தேர்வு செய்யப்படுவார். அவருடன் 4 ஆணையர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பித்த அனைவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில், இறையன்பு கலந்து கொள்ளப் போவதில்லை.

ஜூன் மாதம்
அதனால், தனது பணி ஓய்வு காலமான ஜூன் மாதம் வரை தலைமைச் செயலாளர் பதவியில் இறையன்பு இருப்பார் . அதையே முதலமைச்சர் விரும்புகிறார் என்று கோட்டை வட்டாரங்கள் சொல்கின்றன. ஆக, மாநில தகவல் ஆணையத்தின் பதவியை இறையன்பு விரும்பவில்லை. ஆனால், ஜூன் மாதம் வரை இறையன்புவை பதவியில் நீட்டிக்க விடக்கூடாது என்றும், வி.ஆர்.எஸ். மூலம் அவர் பதவி விலக மறுத்தால் , அடுத்த வாரத்துக்குள் அவரை தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ட்ரான்ஸ்ஃபர் செய்யவும் ஒரு வலுவான குரூப் முதல்வரிடம் வலியுறுத்தி வருகிறது. இதனால் கோட்டையில் உயரதிகாரிகள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications