ட்விஸ்ட்.. தலைமை தகவல் ஆணையர் பதவி.. போட்டியிலிருந்து விலகிய இறையன்பு? ஏன்? ஸ்டாலின் இறக்கும் டீம்

தலைமை செயலாளர் வெ இறையன்பு இந்த பதவிக்காக விண்ணப்பம் தாக்கல் செய்து இருந்ததாக முதலில் கூறப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. முதல்வர் ஸ்டாலின் இந்த பொறுப்புகளுக்கு முக்கிய டீம் ஒன்றை டிக் அடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இறையன்பு இந்த ஆணையர் பொறுப்பிற்கான போட்டியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி காலியாக உள்ளது. பல ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் நடந்தும் கூட இந்த பொறுப்பிற்கு மட்டும் ஆணையர் நியமனம் நடக்கவே இல்லை.

தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.ராஜகோபால் பதவிக்காலம் முடிந்த பின் அந்த இடம் நிரப்பப்படவில்லை.

தகவல் ஆணையர்

தகவல் ஆணையர்

இவருக்கு கீழ் இயங்கிய தகவல் ஆணையர்களாக இருந்த எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலமும் மொத்தமாக முடிவிற்கு வந்தது. இவர்களின் பதவி மட்டும் நிரப்பப்படாமல் இருந்தது. பொதுவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிதான் இந்த பொறுப்பிற்கு நியமனம் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது இந்த பதவிக்கு முக்கியமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனை கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

மூத்த ஐஏஎஸ் அதிகாரி

மூத்த ஐஏஎஸ் அதிகாரி

மொத்தமாக தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் தலைமை ஆணையர் மற்றும் 4 ஆணையர்களின் பதவிகள் காலியாக இருக்கின்றன. இந்த பதவிகளை விரைவில் நிரப்பப்பட வேண்டும். பதவிக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக அக்பர் அலி தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது தமிழக அரசு. தகுதியானவர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பிப்பது கமிட்டியின் பணி. அந்த வகையில், தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த பதவிகளுக்கு விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது அந்த விளம்பரம்.

கமிட்டி

கமிட்டி

திமுக, அதிமுக ஆட்சி நடந்த கடந்த காலங்களில் இப்படி கமிட்டியெல்லாம் அமைக்கப்பட்டது கிடையாது ; விளம்பரமும் தரப்பட்டது கிடையாது. முதல்வர் தலைமையில் இயங்கும் குழுவே நேரடியாக பரிசீலித்து தகுதியானவர்களை தேர்வு செய்யும். ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில், கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டி தரும் பட்டியலை வைத்து, இறுதியில் முதல்வர் முடிவு செய்வார் என்கிற நடைமுறையை உயரதிகாரிகள் சிலர் கொண்டு வந்தனர். தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக கொடுக்கப்பட்ட விளம்பரம் கூட , ரத்து செய்து, ரத்து செய்து மூன்று முறை விளம்பரம் செயதனர்.

விளம்பரம்

விளம்பரம்

இந்த நிலையில், தலைமை ஆணையர் பதவிக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு , ஐ.பி.எஸ். அதிகாரி ஷகில் அக்தர் உள்பட பலரும் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இந்த போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் இறையன்பு. அவர் தற்போது தலைமை செயலாளராக இருக்கிறார். ஜூன் வரை அவரின் பதவிக்காலம் இருக்கிறது. அதனால், தனது பணி ஓய்வு காலமான ஜூன் மாதம் வரை தலைமைச் செயலாளர் பதவியில் இறையன்பு இருப்பார் . அதையே முதலமைச்சர் விரும்புகிறார் . அதற்கு முன் இந்த பதவியை பெற வேண்டும் என்றால் அவர் விஆர்எஸ் வாங்க வேண்டும், என்று கோட்டை வட்டாரங்கள் சொல்கின்றன. எனவே அவர் தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்காமல் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் . இந்த நிலையில், அக்பர் தலைமையிலான கமிட்டி தனது தேர்வு பட்டியலை முதல்வர் ஸ்டாலினிடம் சமீபத்தில் ஒப்படைத்து விட்டது.

டீம்

டீம்

இதனையடுத்து, முதல்வர் தலைமையிலான தேர்வு கமிட்டி கடந்த 3-ந்தேதி கோட்டையில் கூடியது. அதில் இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், 4 ஆணையர்கள் பதவிக்கு, ஐ.பி..எஸ். அதிகாரி தாமரைக்கண்ணன், டாக்டர் செல்வராஜ், அட்வகேட் ராஜாசெந்தூர்பாண்டியன் மற்றும் ஒரு பெண்மணி ஆகிய 4 பேர் இறுதிக் கட்ட தேர்வில் இருப்பதாக கோட்டையிலிருந்து தகவல் கிடைக்கிறது. தலைமை ஆணையரை தேர்வு செய்வதில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதால், முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருக்கிறது என்கிறது கோட்டை தரப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+