தங்கம் மாதிரி அதிகாலையே அறிவிப்பு.. சென்னையில் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. பெண்களுக்கு லக்
சென்னை: சென்னையில் கட்டணமில்லா பேருந்து சேவையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாநகரப் பேருந்துகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தேவை அதிகரித்து வருவதால் சேவையை அதிகரிக்க போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுக்க பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர், திருநங்கையர் உட்பட அனைத்து மகளிரும் தமிழ்நாடு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி 2021 ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், அரசு பேருந்துகளில் (மாநகரப் பேருந்துகள் மற்றும் நகரப் பேருந்துகள்) பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் செய்யலாம். பெண்கள் கல்வி, வேலை மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளுக்கு சுதந்திரமாக பயணிக்க உதவுதல். குடும்பச் செலவை குறைத்து பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல். பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல். இந்தத் திட்டம் பெண்கள் மற்றும் பிற பயனாளிகளுக்கு அதிகளவில் பயனளிக்கின்றது. தமிழக அரசின் சமூக நல திட்டங்களில் முக்கியமான திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த திட்டத்தைதான் தற்போது விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
தமிழகத்தில் வசிக்கும் அனைத்து பெண்களும் இதில் பயணம் செய்ய தகுதி உடையவர்கள். திருநங்கைகள் இதில் பயணம் செய்ய தகுதி உடையவர்கள். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் இதில் பயணம் செய்ய தகுதி உடையவர்கள்.
எந்த வகையான பேருந்துகளில் பயணிக்கலாம்?
நகரப் பேருந்துகள் (Ordinary fare)
மாநகரப் பேருந்துகள் (MTC - Chennai)
அரசுப் பேருந்துகளின் சாதாரண சேவைகள்
எந்த பேருந்துகளில் செல்ல முடியாது?
விரைவு சேவை (Express, Deluxe, AC buses, Private buses) பேருந்துகளில் இவர்கள் இலவச பயணம் மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி பயணிக்கலாம்?
பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்படும், ஆனால் கட்டணம் வசூலிக்காது.
பஸ் கண்டக்டரிடம் அடையாளம் காட்ட தேவையில்லை. எந்த விதமான அடையாள அட்டையையும் தேவையில்லை. 2024 ஜூலை மாதத்திற்குள், இந்தத் திட்டத்தின் கீழ் 510 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பெண்கள் ஒரு மாதத்திற்கு சராசரியாக ₹888 வரை போக்குவரத்து செலவுகளில் சேமிக்கின்றனர் என்று தமிழக அரசின் கணக்கெடுப்பு கூறுகின்றது.
அதேபோல் பயனாளிகளில் 39% தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், 21% மிகபிற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், 18% பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பெண்கள் மற்றும் சமூகத்தின் பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தைதான் தற்போது விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர். சென்னையில் கட்டணமில்லா பேருந்து சேவையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாநகரப் பேருந்துகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தேவை அதிகரித்து வருவதால் சேவையை அதிகரிக்க போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் காலை மாலை நேரங்களில் இலவச பேருந்துகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் பயணம் செய்வது கடினமாக உள்ளது. பெண்கள் நெருக்கடியான சூழலில் பயணம் செய்கிறார்கள். இதை சரி செய்வதற்காக கூடுதல் பேருந்துகளை விடும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications