இனி கூட்ட நெரிசல் இல்லை! வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு! தமிழக அரசின் ஸ்மார்ட் மூவ் விரைவில்!
சென்னை: வீட்டில் இருந்தபடியே படியே பத்திரப்பதிவு செய்து கொள்ளும் வகையில் தமிழக அரசு ஒரு திட்டத்தை விரைவில் தொடங்கப்படுகிறது. வெறும் 10 நிமிடங்களில் வேலை எளிதாக முடிந்துவிடும் என்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் எப்படி பத்திரப்பதிவு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தமிழகம் முழுவதும் 590 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பத்திரப்பதிவு அலுவலகங்களில் சொத்து பரிமாற்ற பதிவு, திருமண பதிவு, உயில், கடன் ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

பொதுவாக இது போன்ற ஆவணங்களை பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுபோல் நாளும் கிழமைகளில் அதிக எண்ணிக்கையில் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும்.
இதனால் நல்ல நாட்களில் மேலும் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த சமயங்களில் மக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. இது குறித்து மக்கள் பல்வேறு தருணங்களில் அரசுக்கு தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பதிவுத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கான பணிகளில் பதிவுத் துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் என்பவர் ஈடுபட்டு வந்தார். இந்த முயற்சியில்தான் பதிவுத் துறை அலுவலகங்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ஒரு சீர்திருத்தமாக ஸ்டார் 3.0 என்ற திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மக்களுக்கு பத்திரப்பதிவு சேவைகள் விரைவாகவும் வீட்டிலிருந்தபடியே கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், மனைப் பிரிவுகளை வாங்கவும் விற்கவும் வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யலாம்.
அதற்கான புதிய மென்பொருள் மூலம் சொத்துகளை வாங்குபவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும் யார் விற்கிறார்களோ அவர்களது பெயர், முகவரி, உள்ளிட்ட விவரங்களையும் சொத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்தால் போதுமானது. மென் பொருளே தானாக பத்திரங்களை உருவகாக்கித் தந்துவிடும்.
பின்னர் ஆதார் எண்ணை பதிவு செய்தால் ஓடிபி எண் கேட்கும். அதை குறிப்பிட்டால், விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இந்த விரல் ரேகைப் பதிவு செய்வதற்கான எந்திரங்கள் இப்போது கடைகளில் ரூ 1500- க்கு கிடைக்கிறது. அதனை வாங்கி அதில் விரல் ரேகையை பதிவு செய்தால் போதும். அனைத்து பணிகளும் வீட்டில் இருந்தபடியே முடிந்துவிடும்.
வெறும் 10 நிமிடம் செலவிட்டால் போதும். நம் கைகளில் பத்திரப் பதிவு செய்வதற்கான ஆவணங்கள் கிடைத்துவிடும். இதன் மூலம் இனி அலைய வேண்டிய நிலை இருக்காது, காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் ஆவணங்களின் நகல் பெறுவதற்கு கூட இப்போது பத்திரப்பதிவு அலுவலகங்களில் காத்துக் கிடக்கும் நிலைமை இனி இல்லாத சூழ்நிலையை பதிவுத் துறை மேற்கொள்ளும்.
ஆன்லைன் வழியாக ஆவணங்களின் நகல் பெற பதிவு செய்யும் போது சார் பதிவாளர் லாகினுக்கு அந்த அனுமதி பதிவு சென்று அதனை அவர் பார்த்து ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற சூழல் இருந்தது. இப்படி நகலை பெற குறைந்தது 2 அல்லது 7 நாட்களாகும். அதை தவிர்க்கும் வகையில் சிஸ்டம் ஜெனரேட்டிங் சிக்னேச்சர் (System Generating signature) என்பதை சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் பதிவு செய்த அடுத்த நிமிடங்களிலேயே அந்த ஆவணங்களின் சான்று நகர் கிடைத்துவிடும். மேலும் குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்களை பதிவு செய்வதற்கும் ஒரு புதுமையான மென்பொருளை பதிவுத் துறை வடிவமைத்து இருக்கிறது.
இந்த சங்கங்களை பதிவு செய்ய இப்போது நேரடியாக அலுவலகத்திற்கு வர வேண்டிய சூழல் இருக்கிறது. இதற்கும் தீர்வு காணப்பட்டு இருக்கும் இடத்திலேயே அதற்கான பதிவுகளை மேற்கொண்டு ஒப்புதல் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை வாங்குவோரும் பத்திரப்பதிவு செய்ய அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வீட்டு வசதி வாரிய அலுவலகத்திலேயே பதிவு செய்து கையில் பத்திரப்பதிவுக்கான ஆவணங்களை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இத்தனை சிறப்புகளையும் சேவைகளையும் கொண்டிருக்கும் திட்டம் விரைவில் முதல்வர் ஸ்டாலினால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்படும் என சொல்லப்படுகிறது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications