ஆட்டிறைச்சி விற்பனை.. வருகிறது புதிய அரசு இணையதளம்.. எப்படி செயல்படும் தெரியுமா? வெளியான தகவல்
சென்னை: தமிழ்நாடு அரசு ஆட்டுக்கறி விலையை தெரிந்து கொள்ள புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஆட்டுக்கறி என்பதை எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
ஆனால் இதில் மாநிலம் முழுக்க ஒரே விலை இருக்காது. இறைச்சியின் விலையை அரசு நிர்ணயம் செய்ய முடியாது என்று கால்நடைத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளனர். ஆட்டிறைச்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய சந்தைகளில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை, அறியும் வகையில் இணைய தகவல் பலகை உருவாக்கப்படுகிறது என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் எப்படி செயல்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஆட்டுக்கறி விலையை சீராக்க புதிய இணையதளம்
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டிறைச்சி விலை உச்சம் அடையும். சில நாட்கள் 1 கிலோ 1000 ரூபாயை கூட தாண்டி செல்லும். சில நாட்கள் திடீரென விலை சரியும். இப்படி ஆட்டிறைச்சி விலை தினமும் மாறியபடியே இருக்கும்.
இதனால் சில பகுதிகளில் மக்கள் ஆட்டிறைச்சியை வாங்க முடியாத நிலை ஏற்படும். இந்த நிலையில்தான் நுகர்வோர் மற்றும் இறைச்சி விற்பனையாளர்கள் இருவரையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி ஆட்டிறைச்சி எவ்வளவு ரூபாய் என்பதை இணையத்தில் பார்க்க முடியும்.
வருகிறது இணையதளம்
கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன் இதுகுறித்து கூறுகையில், அதிகாரப்பூர்வ தினசரி ஆட்டுக்கறி விலையை காண்பிக்கும் ஒரு பிரத்யேக இணையதளம் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் மாறுபட்ட ஆட்டுக்கறி விலைகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் இறைச்சி சந்தையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்வது ஆகும். அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, இந்த இணையதளத்தில் தினசரி ஆட்டுக்கறி விற்பனை விலை புதுப்பிக்கப்படும். சந்தை விலை காட்டப்படும். மாறாக அரசு இந்த விலையை நிர்ணயம் செய்யாது. ஆட்டிறைச்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய சந்தைகளில் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை, அறியும் வகையில் இணைய தகவல் பலகை உருவாக்கப்படுகிறது.

காய்கறி
ஆனால் காய்கறி விலை போல இனி ஆட்டிறைச்சி விலை தமிழ்நாடு முழுக்க ஒரே மாதிரி நிர்ணயம் செய்யப்படாது. மாறாக உங்கள் மாவட்டத்தில் இன்று விலை என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும்.
சென்னை: ₹900 முதல் ₹950 வரை
மதுரை: ₹880 முதல் ₹930 வரை
கோயம்புத்தூர்: ₹870 முதல் ₹940 வரை
திருச்சிராப்பள்ளி: ₹890 முதல் ₹950 வரை
சேலம்: ₹880 முதல் ₹910 வரை
தேவை, விநியோகம் மற்றும் போக்குவரத்து செலவுகள் காரணமாக இந்த விலைகள் ஏறக்குறைய தினசரி மாறுபடும். உதாரணமாக, சென்னையில் திங்களன்று ஒரு கிலோ ₹920 ஆக இருந்த விலை, சந்தைக்கு வரும் கால்நடைகளின் வரத்து குறைந்ததால் புதன்கிழமை ₹950 ஆக அதிகரித்தது. மதுரையில், வார இறுதியில் கையிருப்பு அதிகமாக இருந்ததால் விலை ₹910 லிருந்து ₹880 ஆக குறைந்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை தேவை அதிகம் ஆனதால் 980 ரூபாயாக உயர்ந்தது.
புதிய நடைமுறையின் மூலம், விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் குறைந்து நுகர்வோர் மற்றும் உண்மையான விற்பனையாளர்கள் இருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையதளம் பயன்பாட்டுக்கு வந்தவுடன், தினசரி விலை நிர்ணயத்திற்கான அதிகாரப்பூர்வ ஆதாரமாக இது இருக்கும். தமிழ்நாடு முழுக்க உள்ள ஆடுகளின் தேவையை பொறுத்து.. இருப்பை பொறுத்து.. சராசரி விலை இதில் காண்பிக்கப்படும். ஆனால் இது எல்லா மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இறைச்சி கடைகள் மற்றும் உள்ளூர் சந்தைகளில் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து சரியான விலையில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்வார்கள்.
உணவுப் பொருட்களின் விலை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் வாடிக்கையாளர் சுரண்டலை குறைக்கவும் மாநில அரசு எடுத்து வரும் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளது. இந்த புதிய முயற்சியானது ஆட்டுக்கறி விற்பனையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதோடு நுகர்வோர்கள் நியாயமான விலையில் ஆட்டுக்கறி வாங்குவதை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications