2 வருடங்களில் தமிழ்நாடு நம்பர் 1.. எப்படி சாத்தியம்? .. பொருளாதார நிபுணர் தந்த முழு டேட்டா இதோ
சென்னை: தமிழ்நாட்டுக்கு அடுத்தடுத்து ஸ்வீட் நியூஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த சில நாள்கள் முன்னதாக எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில், இந்திய அளவில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்திருந்தது என்ற குட் நியூஸ் கிடைத்தது.
அந்த சந்தோஷத்தின் அளவு குறைவதற்குள் 'ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில்' தமிழ்நாடு இப்போது முதல் இடத்தைப் பிடித்துள்ளது. எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு கர்நாடகாவை பின்னுக்குத் தள்ளியது. 'ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில்' தமிழ்நாடு இப்போது குஜராத்தை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.

இந்த 'ஏற்றுமதி தயார்நிலை குறியீடு' என்றால் என்ன? அதனால் என்ன பயன்? என்ற பல கேள்விகளுடன் பொருளாதார நிபுணர் ரகுநந்தனிடன் பேசினோம்.
அவர், "இந்தப் பட்டியல்கள் எல்லாம் ஒன்றிய அரசு வெளியிடுபவை. அதிகாரப்பூர்வமான ஆவணங்கள். இந்தத் தரவரிசைகளைப் பார்த்துத்தான் ஒரு வெளிநாட்டு நிறுவனம் எந்த மாநிலத்தில் தொழில் தொடங்க நல்ல சூழ்நிலை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும்.

ஏனென்றால், ஒரு வெளிநாட்டு நிறுவனம் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கள ஆய்வு செய்து, அதன் பின்னால் தொழிலைத் தொடங்க முடியாது. ஆகவே, அந்தவிதத்தில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த 'ஏற்றுமதி தயார்நிலை குறியீடு பட்டியல்' மிகமிக முக்கியமானது" என்கிறார்.
மேலும் அவரிடம் இந்த நிதி ஆயோக் பற்றியும் அது எப்படித் தரப்பட்டிலைத் தயாரிக்கிறது என்பது பற்றியும் சில விளக்கங்களைக் கேட்டோம். மிக எளிமையாகப் புரியும்படி விளக்கினார் பொருளாதார நிபுணர் ரகுநந்தன்.

Export preparedness index சொல்வது என்ன?: "நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 'ஏற்றுமதி தயார்நிலை குறியீடு', அதாவது இதை ஆங்கிலத்தில் சொல்லவேண்டும் என்றால், Export preparedness index. இதில் தான் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2 வருடங்களாகக் குஜராத் மாநிலம்தான் முதலிடத்திலிருந்தது. அந்தச் சாதனையைத் தமிழ்நாடு இப்போது அடித்து நொறுக்கிவிட்டு முதலிடத்திற்கு வந்துள்ளது.
இந்த நிதி ஆயோக் ஒன்றிய அரசின் அமைப்பு. இது ஆண்டுதோறும் ஏற்றுமதி வர்த்தகத்திற்குச் சாதமான சூழ்நிலை அதிகம் உள்ள மாநிலங்களைத் தரவரிசைப்படுத்தி, அதன் அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

அப்பட்டியலுக்கு Export preparedness index என்று பெயர். இந்தத் தரவரிசையை அவர்கள் நான்கு விதமான காரணங்களைக் கொண்டு அளவிடுகிறார்கள். ஒன்று, அரசின் கொள்கை முடிவுகள். இரண்டு, தொழிலை நடத்துபவர்கள் அல்லது தொடங்குபவர்களுக்கு ஏதுவான சூழ்நிலைகள். மூன்று, ஏற்றுமதிக்கு உகந்த சூழ்நிலைகள். நான்கு, நடைமுறையில் ஏற்றுமதியானது எந்தளவுக்குச் செயலாற்றி உள்ளது என்பதற்கான தரவுகள்.
அனைத்துக்கும் மதிப்பெண்கள்: இவற்றை வைத்துத்தான் இந்தப் பட்டியலை நிதி ஆயோக் கணித்துவருகிறது. அரசின் கொள்கைகள் என்றால் அதற்கு 20% மதிப்பெண்கள். தொழில் நடத்துவதற்கான சூழ்நிலை நிவாரத்திற்கு 40% மதிப்பெண்கள். ஏற்றுமதிக்கான உகந்த சூழ்நிலைக்கு 20% மதிப்பெண்கள். ஏற்றுமதி செயல்பாட்டுக்கு 20% மதிப்பெண்கள்.

இதில் ஒவ்வொன்றுக்கும் ஏராளமான உட்பிரிவுகள் ஏராளமாக உள்ளன. அவற்றையும் கணக்கிட்டுத்தான் மதிப்பிடுவார்கள். இத்தனை மதிப்பீடுகளிலும் நான் முன்பே குறிப்பிட்ட மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே இந்திய அளவில் ஒரு மாநிலம் முதல் இடத்திற்கு வரமுடியும்.
இதில் நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விஷயம் என்னவென்றால், கடந்த 2 ஆண்டு ஆட்சிக்காலத்திற்குள் தமிழ்நாடு அனைத்து குறியீடுகளிலும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது என்பதைத்தான். அந்த வளர்ச்சிதான் மிக அபாரமானது.

4வது இடத்திற்குப் போன குஜராத்: ஏறக்குறைய தமிழ்நாடு 80.89 என்ற அளவில் மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. இதுவரை முதல் இடத்திலிருந்துவந்த குஜராத் மாநிலம் 73.22 என்ற அளவில் மிகக் குறைவான மதிப்பெண்ணைப் பெற்று இப்போது தரவரிசை பட்டியலில் 4ஆவது இடத்துக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்திற்கு மகாராஷ்டிராவும் மூன்றாவது இடத்திற்குக் கர்நாடகாவும் முன்னேறி இருக்கின்றன.
இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டியது, இந்த இடத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல. ஏற்றுமதிக்கான சூழலை உருவாக்குவது, புதிய தொழில் நிறுவனங்களை ஈர்ப்பது, முன்பே செயல்பட்டு வரும் நிறுவனங்களை நன்றாகச் செயல்புரிய வைப்பது, அந்நிறுவனங்களை ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பது எனப் பல அம்சங்களில் தொடர்ந்து சரியாகத் திட்டமிட்டு, அரசு செயலாற்றினால்தான் இந்த இலக்கை அடையமுடியும்.

அதைச் சரியாகச் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. அதற்கு வியூகம் வகுத்து இந்தச் சாதனையைச் செய்து காட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இதனால் மாநிலத்திற்கே பெருமை கிடைத்துள்ளது.
இந்தச் சாதனை கொரோனா காலகட்டத்திற்கு நடுவே அரசு செய்துள்ளது. அதில்தான் அரசுக்கு அதிக சவால்கள் இருந்திருக்கும். முன்பே இயங்கி வந்த தொழிலைத் தொடர்ந்து முடங்கவிடாமல் இயக்க வைக்கவேண்டும்.
அதைப்போன்று புதிய தொழில் தொடங்க வருபவர்களுக்குத் தக்க வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலைகளை வென்று நம் மாநிலம் இதைச் சாதித்திருக்கிறது.
கிட்டத்தட்ட இந்த இரண்டு ஆண்டுகளில் தொழில் தொடங்குவதற்கான 27 வழிகாட்டு மதிப்பீடுகளை நாம் புதியதாக உருவாக்கி உள்ளோம். ஒருவர் தொழில் தொடங்க வந்தால், அவருக்கான நடைமுறைகளில் அதிக நெருக்கடிகள் இல்லாமல் ஆக்கி இருக்கின்றோம்.
தமிழ்நாடு சாதித்தது எப்படி?: சுமார் 140 சேவைகளை நாம் ஆன்லைன் மூலம் இணைத்திருக்கிறோம். TAMIL NADU INDUSTRIAL GUIDANCE & EXPORT PROMOTION BUREAU என்ற ஒன்றை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். அது தொழில்முனைவோரை எளிதாக வழிநடத்திச் செல்ல உதவி செய்துவருகிறது.
இதற்கிடையே முதலமைச்சர் ஸ்டாலினும் வெளிநாடுகளுக்குச் சென்று புதிய நிறுவனங்களைத் தொழில் தொடங்க வரும்படி அழைத்துவருகிறார். ஒரு தொழில்முனைவோர் தனது தேவைக்கு ஏற்ப உடனடியாக ஒரு முதல்வரைச் சந்தித்துவிட முடியாது. அது எளிதும் இல்லை.
ஆனால், அந்த நிலையைத் தமிழ்நாடு அரசு மாற்றி இருக்கிறது. ஒரு தொழில் முனைவோர் முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்க வேண்டும் என விரும்பினால், அடுத்த 2 நாள்களில் சந்தித்துவிட முடிகிறது.
நான் சொன்ன இந்தக் காரணங்களால்தான் தமிழ்நாடு இன்று முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்தப் பெருமைக்கு அரசும், அந்த அரசு எந்திரத்தைச் சரியாக வழிநடத்தி கொள்கை வகுத்த முதல்வர் ஸ்டாலினும் முக்கிய காரணம்" என்கிறார் ரகுநந்தன்
-
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications