சூப்பர் நியூஸ் தந்த தமிழக அரசு.. ஆம்னி பஸ்ஸில் அதிரடி.. என்னாது கட்டணம் 30 சதவீதமா? குஷியில் பயணிகள்
சென்னை: பொதுமக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு, தமிழக போக்குவரத்து துறை பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது.. அந்தவகையில், மிக முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், பொங்கல், புத்தாண்டு, ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகை விடுமுறை நாட்களில், ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் அதிகமாகிவிடுவது இயல்பாகிவிட்டது. இப்போதும் அதே குற்றச்சாட்டுகள் எழுந்தபடியே உள்ளன.. இதுகுறித்து தமிழக அரசும், விதிமுறைகளை மீறக்கூடாது என்று எச்சரித்தபடியே உள்ளது.

கட்டண கொள்ளை: எனினும், ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு, கட்டண கொள்ளையைத் தடுக்க முடியவில்லை.. அதனால்தான், ஆம்னி பஸ்களில் அதிரடி சோதனை நடத்தி, கட்டணங்களில் விதிமீறல் நடந்ததை நேரடி ஆய்வு செய்து வருகிறார்கள்.. அந்தவகையில், ஆயுதபூஜையின்போது, 119 பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறை பிடித்ததுடன், 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதமும் விதித்தனர்.
அரசின் இந்த நடவடிக்கையை ஆம்னி பஸ் ஓனர்கள் எதிர்பார்க்கவேயில்லை. எனவே, விதிகளை மீறி இயக்கப்படாத ஆம்னி பஸ்களை விடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர். பிறகு, வரி கட்டிய பஸ்கள் மட்டும் விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன், தமிழக அரசு தொடந்து பேச்சுவார்த்தை நடத்தியபடியே வருகிறது.
அரசு பஸ்கள்: இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்கும் மற்றும் பிற பகுதிகளுக்கு சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கும் கூடுதல் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து மட்டும் மொத்தம் 16 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன..
கும்பகோணம் மற்றும் இதர கோட்ட அரசு போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக வரும் 9-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
ஆம்னி பஸ்கள்: ஆம்னி பஸ்கள் பொதுமக்கள் அனைவரும் அரசு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆம்னி பஸ் உரிமையாளர்களை அழைத்து கட்டணம் நிர்ணயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன் பேரில் தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்து நிர்ணயித்த கட்டணங்களில் இருந்து 30 சதவீதம் குறைப்பு செய்து இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை மீறி கூடுதலாக கட்டணம் வசூலித்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அமைச்சர் கண்டிப்புடன்கூறியிருக்கிறார்.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications