ஊருக்கு போறீங்களா.. தொடர் விடுமுறை வேற.. தமிழக அரசின் போக்குவரத்து துறை தந்த மேஜர் அறிவிப்பு பாருங்க
சென்னை: சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு பெருத்த நிம்மதியை தந்து வருகிறது.
பணிநிமித்தம், கல்வி, உட்பட பல்வேறு காரணங்களுக்காக, சொந்த ஊரிலிருந்து பொதுமக்கள் நகரங்களுக்கு கிளம்பி செல்வது வழக்கம்.. அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற தொழிற்நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் வசித்து வசித்து வருகின்றனர்.

வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம்..
விடுமுறை நாட்கள்: இதுபோன்ற சமயங்களில் பஸ்கள், ரயில்கள் என எல்லா இடங்களிலும் நெரிசல் காணப்படும். இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது... ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும் இயக்கி வருகிறது. அந்த வகையில், இந்த முறையும் ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வார இறுதி நாளான 2ம் சனிக்கிழமை வருகிற 12ம் தேதி வருகிறது.. மறுநாள் ஞாயிற்றுக் கிழமையை 13ம் தேதி வருகிறது.. இந்த 2 நாட்களுமே விடுமுறை நாளாகும்.. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம்.. அன்றைய தினமும் அரசு விடுமுறை தினம் என்பதால், அரசுத் துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஒருநாள் விடுப்பு எடுக்கும்பட்சத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுப்பு கிடைத்துள்ளது. இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தி கொண்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி முடிவு செய்துள்ளனர்.
ஆடி மாதம்: ஆடி மாதம் என்பதால், நிறைய பேர், கோயில் திருவிழாக்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, பொதுமக்களின் வசதியை கருத்தில்கொண்டு, வெளியூர்களுக்கு செல்ல ஏதுவாக 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில், "வெளிஊர்களுக்கு செல்லும் பயணிகள், சுற்றுலாவுக்கு செல்ல திட்டமிடும் பயணிகள், தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும். முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகளின் கூடுதல் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துக் கழகங்கள் இயக்க திட்டமிட இயலும். எனவே, பயணிகள் சிரமமின்றி, பாதுகாப்பாக திட்டமிட்டபடி பயணிக்கவும் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அரசு அதிரடி: வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமை வரை பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதுநாள் வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள 11.08.2023 அன்று 18,199 பயணிகளும், 12.08.2023 அன்று 6,949 பயணிகளும் மற்றும் 13.08.2023 அன்று 4.514 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
கூடுதல் பஸ்கள்: பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 11.08.2023 அன்று தினசரி இயங்க கூடிய பஸ்களுடன், கூடுதலாக 500 பஸ்களும், 12.08.2023 அன்று 200 பஸ்களும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 1,100 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதுமட்டுமின்றி, 15.08.2023 செவ்வாய்க்கிழமை, சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்களும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகரிப்பு: அதேபோல, செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 12,257 பயணிகள் முன்பதிவு செய்திருப்பதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. அதனால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று போக்குவரத்துறை அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications