Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டு வாசலில்.. வாகனம் நிறுத்தினால் அவ்வளவுதான்.. இனி என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில், வீட்டு வாசலில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து போலீசார் அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாகனப்புகை என்பது தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது.. அதனால்தான், நீதிமன்றமே அவ்வப்போது இந்த விவகாரங்களில் தலையிட்டு, அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

Vehicles Tamil Nadu Transport Department MHC

தமிழகத்தில் தணிக்கை செய்வதற்காக வாகனப்புகை சோதனை மையங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன... அதன்படி, உரிமம் பெறுவது, பெயர் மாற்றம் செய்வது போன்றவற்றிற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் வாகனங்களுக்கு வாகனப் புகை தணிக்கை சான்றிதழ் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அபராதங்கள்: வாகனங்களை திரவ எரிபொருளில் இருந்து, கேஸ் போன்ற வாயு எரிபொருள்களுக்கு மாற்றுவதால், புகையை எளிதாக கட்டுப்படுத்த முடியும்.. அதனால்தான், தமிழ்நாட்டில் தாலுகா அளவில் பறக்கும் படைகளை அமைத்து, வாகனப் புகை சான்றிதழ் பெறப்பட்டிருப்பது குறித்து ஆய்வு செய்து, அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு, தொடர்ந்து தவறினை மேற்கொள்பவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று நீதிமன்றம் ஒருமுறை கறாராக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தனியார் நிறுவன அதிகாரி கிஷார் என்பவர் மனு ஒன்றினை தற்போது தாக்கல் செய்திருக்கிறார்.. அந்த மனுவில், "சென்னை அண்ணாநகர், N பிளாக்கில், 25வது தெருவில் நான் வசித்து வருகிறேன்.. எங்கள் குடியிருப்பு பகுதியில், தெருவோர உணவு கடைகளை, உரிமம் பெறாமல் நடத்துகிறார்கள்.. தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் வாகனங்களை அருகில் உள்ள தெருக்களில் நிறுத்துகின்றனர்.

சட்ட விரோத செயல்கள்: இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சட்ட விரோத செயல்களும் நடக்கின்றன. பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. எனவே, உரிமம் பெறாமல் இயங்கும் கடைகளையும், அனுமதியின்றி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும்" என்ற மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவானது, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, முதல் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது... அப்போது போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, ''மனுதாரரின் புகாரை விசாரித்து வாகனங்கள் அகற்றப்பட்டு, அந்தப் பகுதியில், நோ பார்க்கிங் போர்டு வைக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

தமிழக போக்குவரத்து துறை: இதையடுத்து, "குடியிருப்பு பகுதிகளில் வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி வாசலில், வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பதற்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று தமிழக போக்குவரத்து போலீசாருக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையையும் தள்ளி வைத்திருக்கிறது.

சமீபத்தில், சாலையோரங்கள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முக்கிய சாலை பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் பார்க்கிங் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் சென்னையில் பொதுமக்கள் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மாநகராட்சி உத்தரவு: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமல்லாமல், தன்னிச்சையாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்... கேட்பாரற்று நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத வாகனங்களும் அகற்றி நடவடிக்கை மேற்கொள்வதோடு, எளிதான போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+