தமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகள் அவசரமாக தேவை - பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
தினசரி 2 லட்சம் தடுப்பூசி போட திட்டம் உள்ளதால் 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசியை அனுப்புங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் தினசரி 2 லட்சம் தடுப்பூசி போட திட்டம் உள்ளதால் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ரெம்டெசிவர் மருந்துகள் தமிழகத்திற்கு தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் தினசரியும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரியும் கொரோனாவிற்கு 12 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தமிழக தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 50 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தினசரியும் 2 லட்சம் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதால் உடனடியாக 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
செங்கல்பட்டில் செயல்படாமல் உள்ள நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள முதல்வர் பழனிசாமி, உடனடியாக 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்புங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்தான ரெம்டெசிவர் மருந்துகளை தமிழகத்திற்கு தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications