தமிழ்நாடு வாழ்க.. மன்னிப்பு கேட்காத கமல்.. 5 மொழியில் வெளியிட்ட போஸ்ட்.. X பக்கத்தை கவனிச்சீங்களா
சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கடந்த ஒரு வாரமாக செய்திகளில் இடம்பிடித்துள்ளார். "கன்னட மொழி தமிழிலிருந்து உருவானது" என்று கமல்ஹாசன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னடர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கமல்ஹாசன் அதற்கு உடன்படவில்லை. இவ்வளவு எதிர்ப்புகள் இருந்தும் அவர் குறைந்தபட்சம் வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. இந்தச் சூழலில், அவர் தமிழ்நாடு குறித்து எழுதிய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் ஒரு நடிகர் மட்டுமல்ல, அவர் இப்போது அரசியல்வாதியும் கூட. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். கம ஆனால், இந்த கட்சி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை.
இருப்பினும், கமல்ஹாசன் அரசியலில் தீவிரமாக இருக்கிறார். தற்போது அவர் தமிழகத்தின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கைகோர்த்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.
திமுக உடனான கூட்டணி
கமல்ஹாசனுக்கு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் அவர் திமுகவுடன் கைகோர்த்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட மற்றும் தமிழ் மொழி கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
ஆரியர்களின் தாக்கம் தமிழ் மற்றும் திராவிடத்தின் மீது இருக்கக்கூடாது என்பதற்காக போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை நடத்தி இந்த கட்சி வளர்ந்துள்ளது. எனவே, கன்னட மொழி தமிழ் மொழியில் இருந்து தான் வந்தது என்று கமல்ஹாசன் பேசியிருப்பதன் பின்னணியில் அரசியல் கணக்குகள் இருக்கிறதா? என்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.
"தமிழ்நாடு வாழ்க" என பதிவு
இந்நிலையில் தான் நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் (X) சமூக வலைதள கணக்கில் "தமிழ்நாடு வாழ்க " என்று எழுதியுள்ளார். தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பதிவு செய்துள்ளார். அதில் ‛தமிழ்நாடு வாழ்க’ என்று பெரிய எழுத்துகளிலும் மற்ற 4 மொழிகளிலும் சின்ன எழுத்துகளிலும் எழுதியுள்ளார்.
மேலும் அதனை அவர் எக்ஸ் பக்கத்தின் முகப்பில் (கவர்) போட்டாவாக மாற்றியுள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. கன்னடம் - தமிழ் மொழி சர்ச்சைகளுக்கிடையே கமல்ஹாசனின் இந்த பதிவு மீண்டும் விவாதத்தை கிளப்பி உள்ளது. நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் சமீபத்திய கருத்துக்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிரச்சனைக்கு என்ன காரணம்?
முன்னதாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த வாரம் சனிக்கிழமை நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார்.
இந்த விழாவில் கமல்ஹாசன் பேசிகையில், ‛‛தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னடம் பிறந்தது'' என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கன்னடம் தமிழில் இருந்து பிறக்கவில்லை. அது தனித்து இயங்க கூடியது என்று கன்னட அமைப்பினர், கர்நாடகா அரசியல்வாதிகள் கூறினர். மேலும் கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்தனர். கமல்ஹாசன் மன்னிப்பு கோரவில்லை. இதனால் தக்லைப் படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் படம் வெளியாகாது
மேலும் போலீஸ் பாதுகாப்புடன் படத்தை கர்நாடகாவில் வெளியிட வேண்டும் என்று கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தெரிவித்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இதனால் வரும் 5ம் தேதி கர்நாடகாவில் தக்லைஃப் திரைப்படத்தை வெளியிட முடியாத நிலை உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
சுந்தர் சி யின் மாஸ்டர் பிளான்.. ரஜினி படத்தில் இருந்து விலக காரணம் இதுவா? அரசியலில் எதிரெதிர் துருவம்! பின்னணி -
"மாதம் ரூ.90,000.." வாயை பிளக்க வைக்கும் பானி பூரி வியாபாரியின் வருவாய்.. விவாதமான வீடியோ -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications