தமிழக வளர்ச்சிக்கு பிரதமராக மோடி வரவே கூடாது.. ராகுலுக்கு செம்ம மாஸ் ஆதரவு- தந்தி டிவி பரபர சர்வே
சென்னை: தமிழ்நாடு வளர்ச்சி அடைய பிரதமராக மோடி வரவே கூடாது என தந்தி டிவி வெளியிட்ட கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை மையமாக வைத்து பல்வேறு கோணங்களில் கடந்த 6 மாதங்களாக தந்தி டிவி கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

தந்தி டிவி கடந்த சில மாதங்களாக யார் பிரதமராக வேண்டும் என்ற தலைப்பில் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள்:
மே மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவு:
ராகுல் காந்தி- 72%
மோடி 27%
ஜூன் மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவு
ராகுல் காந்தி- 72%
மோடி 27%
ஜூலை மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவு
ராகுல் காந்தி- 72%
மோடி 28%

ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவு
ராகுல் காந்தி- 72%
மோடி 28%
இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட சில கருத்து கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு வளர்ச்சிக்கு யார் பிரதமராக வேண்டும்? என்ற கருத்து கணிப்பின் முடிவுகள்
ராகுல் காந்தி- 70%
மோடி- 25%
இதர - 5%
சமமான கூட்டாட்சிக்கு யார் பிரதமராக வேண்டும்? என்ற தலைப்பில் தந்தி டிவி அக்டோபர் மாதம் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள்
ராகுல் காந்தி - 70%
நரேந்திர மோடி- 28%
இதர -2 %
பெண்கள் பாதுகாப்பு, வளர்ச்சிக்கு யார் பிரதமராக வேண்டும்? என்ற தலைப்பிலான கருத்து கணிப்பில்,
ராகுல் காந்தி- 69%
மோடி- 28%
இதர - 3%

உலகில் இந்தியாவின் புகழ் உயர யார் பிரதமராக வேண்டும்?
ராகுல் காந்தி- 61%
மோடி- 37%
இதர- 2%
கடந்த சில மாதங்களாக தந்தி டிவி நடத்தி வரும் பிரதமர் மோடி, ராகுல் காந்தியை முன்வைத்த கருத்து கணிப்புகளில் ராகுல் காந்திக்குதான் மிகப் பெரிய ஆதரவு அலை தமிழ்நாட்டில் இருக்கிறது என்பது வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இது பாஜகவினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த கருத்து கணிப்பு முடிவுகளை கடுமையாகவும் பாஜகவினர் விமர்சித்தும் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications