தமிழ்நாடு வக்பு தீர்ப்பாயத்தின் வழக்குகள் குறித்த விவரம்: தமிழக அரசை அணுக உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழ்நாடு வக்பு தீர்ப்பாயத்தின் வழக்குகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசை அணுகும்படி மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்பு தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளின் பட்டியல், நிலவரம் மற்றும் உத்தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரி சையது கலிஷா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய ஆகியோர் விசாரித்தனர். அப்போது தமிழக அரசு தரப்பில் வக்பு தீர்ப்பாயம் என்பது மின்னணு நீதிமன்றங்கள் அடிப்படையில் வராது என்றும், அதனால் அதுதொடர்பான நடவடிக்கைகளை பதிவேற்ற முடியாது என கூறப்பட்டது.
மேலும், மனுதாரருக்கு இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசை அணுகும்படி அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications