சென்னை மண்ணடி மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசல் வசம் தர்கா! 46 ஆண்டுகால பஞ்சாயத்து! வக்பு வாரியம் விளக்கம்!
சென்னை மண்ணடி மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசல் வசம் தர்கா! 46 ஆண்டுகால பஞ்சாயத்து! வக்பு வாரியம் விளக்கம்!
சென்னை: சென்னை மண்ணடியில் உள்ள மஸ்ஜிதே மஹ்மூர் பள்ளிவாசல் வசம் உள்ள ஃபத்தேஹ் ஷா மஸ்தான் தர்காவை தனி நபர் ஒருவர் உரிமை கோருவதாக தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.
தர்கா வளாகத்திற்கு உள்ளேயே கட்டிடத்தைக் கட்டி, தானும் குடியிருந்து கொண்டு, மற்றவர்களுக்கும் வாடகைக்கும் விட்டுள்ள திலாவரி அலி என்பவர் தன்னை பற்றி அவதூறு பரப்புவதாகவும் கூறியிருக்கிறார்.
46 ஆண்டுகால பஞ்சாயத்து தொடர்பாக வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான் அளித்த விளக்கம் வருமாறு;

மஸ்ஜிதே மஹ்மூர் பள்ளிவாசல்
''சென்னை மண்ணடியில் மிகப்பெரிய புகழ்பெற்ற மஸ்ஜிதே மஹ்மூர் பள்ளிவாசலுக்கு பாத்தியப்பட்ட, பள்ளிவாசலுடனேயே ஒட்டியிருக்கிற ஃபத்தேஹ் ஷா மஸ்தான் தர்கா 1976ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் எண்டோவ்மென்ட் மூலமாக மஸ்ஜிதுல் மஃமூர்க்கு வழங்கப்பட்டது. அப்பொழுது அங்கு காசிம் அலி என்பவர் பணி செய்து கொண்டிருந்தார். அவர் 1977ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியிடம், "இந்த தர்கா மஸ்ஜிதுல் மஃமூர் உடன் சேர்ந்துவிட்டது என்பதால், இதற்கான வரி வசூல் உட்பட இந்த தர்கா தொடர்பான எதுவாக இருந்தாலும் மஸ்ஜிதுல் மஃமூர் நிர்வாகத்திடமே கேட்டுக் கொள்ளலாம்" என தகவல் விண்ணப்பம் அளித்து இருந்தார். அதை சென்னை மாநகராட்சியும் ஏற்றுக் கொண்டது.''

நீதிமன்றத்தில் அப்பீல்
''காசிம் அலி உடைய மகன் ஃபைஸ் அலி, தன் தந்தை எழுதிக் கொடுத்ததை எதிர்த்து, தர்கா தங்களுக்கே சொந்தமானது என்று கூறி நீதிமன்றத்திற்குச் சென்றார். இந்த தர்கா மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளிவாசலுக்கே உரியது என்று கூறி, 1982ஆம் ஆண்டு அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் அவர் 1983ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அப்பீல் செய்கிறார். அதையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விடுகிறது.''

ஃபத்தேஹ் ஷா தர்கா
''1996 வாக்கில் ஃபைஸ் அலி இறந்துவிட்ட காரணத்தால், அவரது மகன் திலாவர் அலி நீதிமன்றத்திற்குச் சென்று இந்த வழக்கில் தன்னையும் சேர்க்க வேண்டும் என்று கேட்கிறார். எந்த வகையிலும் முகாந்தரம் இல்லை என்று கூறி உயர் நீதிமன்றம் அதையும் தள்ளுபடி செய்து விடுகிறது. இப்படியிருக்க, மேற்படி ஃபத்தேஹ் ஷா தர்காவை, "நாங்கள்தான் அதற்கு வாரிசு" என்று சொல்லிக்கொண்டு, சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, அதில் கட்டிடங்களையும் எழுப்பி, வாடகைக்கும் விட்டுக் கொண்டிருக்கக் கூடிய வேலையை இப்பொழுது இருக்கக்கூடிய திலாவர் அலி செய்து கொண்டிருக்கிறார்.''

மூன்று கடைகள் காலி
''இதில் வாரிசுரிமை கொண்டாட எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றம் கூறிவிட்ட நிலையிலும், தர்கா வளாகத்தில் உள்ள ஐந்து கடைகளை திலாவர் அலி - சட்டத்தை மீறி தனக்கு உரிமையானது போல தன் பெயரில் எழுதி வாடகை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்தப் பிரச்சினை வக்பு வாரியத்துடைய கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. பிறகு, மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளி நிர்வாகம் வக்பு வாரியத்திடம் முறையாக eviction order பெற்று, ஐந்து கடைகளையும் காலி செய்வதற்கான நடவடிக்கைகளைச் செய்து இருக்கிறது. இதுவரை இரண்டு கடைகள் காலி செய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் மூன்று கடைகள் காலி செய்யப்பட வேண்டும்.''

ஆக்கிரமித்து, அபகரித்து
''இப்படியிருக்க, தான் உரிமை கொண்டாடுவதற்கு எந்த வழியும் இல்லாத நிலையிலும் - திலாவர் அலி தர்கா வளாகத்திற்கு உள்ளேயே கட்டிடத்தைக் கட்டி, தானும் குடியிருந்து கொண்டு, மற்றவர்களுக்கும் வாடகைக்கும் விட்டுக்கொண்டு, ஆக்கிரமித்து, அபகரித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மூலமாக, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துகளையெல்லாம் மீட்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வரும் இந்த நிலையில், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஏதுவாக - தர்காக்கள் பேரவை என்று ஓர் அமைப்பை உருவாக்கிக்கொண்டு, அதைத் தனக்கு ஒரு கவசமாக ஆக்கிக் கொண்டு, யாரும் அந்தச் சொத்தை மீட்டு எடுத்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து, அங்கிருந்தவாறே கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு, நாட்களைக் கடத்தி வருகிறார் திலாவர் அலி.''

பார்த்தது கூட கிடையாது
''வேடிக்கை என்னவென்றால், இந்த திலாவர் அலி உட்பட இவர்களில் ஒருவர் கூட இதுவரை என்னை நேரில் வந்து பார்த்து, நீங்கள் இந்த குற்றத்தைச் செய்திருக்கிறீர்கள்; உங்கள் மீது இந்தக் குறை இருக்கிறது; இதற்கு என்ன தீர்வு என்று கேட்டதில்லை. திலாவர் அலி என்பவரை இதுவரை நான் பார்த்தது கூட கிடையாது.''
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications