"ஓவர் ஓவர்".. சென்னையில் ஒருவழியாக தணியும் மழை.. ஆனால்.. இன்று 20 மாவட்டங்களில் வெளுத்தெடுக்கும்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த சனிக்கிழமை தமிழ்நாட்டில் தொடங்கியது. முந்தைய பருவமழையை போல இல்லாமல் தமிழ்நாட்டில் இந்த முறை பருவமழையின் முதல் நாளில் இருந்தே மழை தீவிரமாக பெய்து வருகிறது.
தற்போது வட இலங்கை கடற்கரையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சூழற்சி நிலவி வருகிறது. இதன் கரணமாகவே தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்து வருகிறது.

இன்று மழை
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும். மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை,, புதுக்கோட்டை மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை
சென்னையில் இன்று அங்கும் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ ஆக இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 22- 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் கடந்த 7 மணி நேரமாக எங்கும் மழை பெய்யவில்லை.

நாளை
தமிழ்நாட்டில் நாளை டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. . கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். அதேபோல் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.

புயல்
முக்கியமாக அதிகாலை நேரங்களில் மழை பெய்யும். அதிகாலையில் நிலக்காற்றும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக ஏற்கனவே இருக்கும் வடகிழக்கு காற்று வீரியம் பெறும். இதனால் மழை அதிக அளவில் வரும் நாட்களில் தென் மாவட்டங்களில் அதிகாலையில் பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. தற்போது புயல் உருவாக போதிய சூழ்நிலை இல்லை. இதனால் சென்னையில் மழை குறைந்து தென் மாவட்டங்களில் மழை வரும் நாட்களில் அதிகரிக்கும்.

நாளை மறுநாள்
நாளை மறுநாள் டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கும். தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். அதேபோல் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். மதுரை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், , விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.












Click it and Unblock the Notifications