நடுவானில் வந்த 2 "சோதனைகள்".. அதிதீவிர புயலாகிறதா மாண்டஸ்? சென்னையில் என்ன நடக்கும்? வானிலை வார்னிங்
சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது எவ்வளவு வலிமையாக இருக்கும், எங்கெல்லாம் மழை பெய்யும் என்று சென்னை ரெயின்ஸ் (chennairains.com) வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த புயல் முதலில் டெல்டா அருகே கரையை கடக்கலாம் அல்லது ஆந்திரா அருகே கரையை கடக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் இது சென்னை அருகே கரையை கடக்க உள்ளது. இதுதான் இந்த வடகிழக்கு பருவமழை சீஸனின் முதல் புயல் ஆகும்.

புயல்
இந்த புயல் தொடர்பாக சென்னை ரெயின்ஸ் (chennairains.com) வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள கணிப்பில், மாண்டஸ் புயல் தொடர்ந்து நல்ல தோற்றத்தை பெற்றுக்கொண்டு இருக்கிறது. நாளை வடக்கு தமிழ்நாட்டு கடலோர மாவட்டங்களை அடையும் வரை மாண்டஸ் நல்ல தோற்றத்தை பெற்றுக்கொண்டு இருக்கும். ஆனால் நேற்றைவிட இன்று மாண்டஸ் புயல் நகரும் வேகம் மாறி உள்ளது. மாண்டஸ் புயல் தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு தென் கிழக்கு பகுதியில் 525 கிமீ தூரத்தில் உள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 625 கிமீ தூரத்தில் உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

சென்னை ரெயின்ஸ்
ஆனால் இந்த மாண்டஸ் புயல் இரண்டு சோதனைகளை எதிர்கொண்டு உள்ளது. ஒன்று மிதமானது முதல் தீவிரமான காற்று வெட்டு. இதன் காரணமாக மாண்டஸ் வலிமை குறையலாம். இன்னொன்று வறண்ட காற்று. வறண்ட காற்றும் புயலின் வலிமையை குறைக்கலாம். இதனால் இந்த புயல் மேலும் தீவிரம் அடைவதில் இருந்து பிரேக் எடுக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த மாண்டஸ் புயல் நிலப்பரப்பை நெருங்கும் நேரத்தில் அதன் உச்ச நிலையை அடையும் வாய்ப்புகள் உள்ளன. இதில் பெரிய மாற்றங்கள் ஏற்படாத வரைக்கும், இந்த மாண்டஸ் புயல் அதி தீவிர புயலாக மாறும் வாய்ப்புகள் இல்லை,.

கணிப்பு
வெதர் மாடல்களின் படி பார்த்தால், காற்று வெட்டு மற்றும் வறண்ட காற்று குறைய வாய்ப்பு இல்லை. இதனால் புயல் அடுத்த 6-12 மணி நேரங்களுக்கு உச்ச நிலையை அடையலாம். அடுத்த 36 மணி நேரங்களுக்கு இந்த மாண்டஸ் புயலாகவே இருக்கும். இந்த மாண்டஸ் புயல் தென் சென்னை பகுதியில், வடக்கு தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் மரக்காணம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இது கரையை கடக்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது லேசான புயலாக கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

எப்படி இருக்கும்?
இதனால் சென்னையில் அதிதீவிர மழை பெய்யும். சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க அதி தீவிர கனமழையை இது கொடுக்க வாய்ப்புகள் உள்ளன. நாளை மாலை புயல் கரையை கடக்கும் என்று சில மாடல்களும், நாளை இரவு கரையை கடக்கும் என்று சில மாடல்களும், அதற்கு மறுநாள் காலை கரையை கடக்கும் என்றும் சில மாடல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் என்ன நடந்தாலும் 36-48 மணி நேரத்தில் புயல் கரையை கடக்கும். இன்று மாலை முதல் நாளை காலை வரை தமிழகக் கடலோரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யக் கூடும். புதுச்சேரி மற்றும் வேதாரண்யம் இடையே ஒரு சில இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இரவு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, என்று சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications