"மோச்சா புயலுக்கு முளைத்த கண்".. நாளை தமிழ்நாட்டில் தொடங்கும் "ஆட்டம்".. வெதர்மேன் வெயில் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் நாளையில் இருந்து வெயில் அதிகரிக்கும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தற்போது அது புயலாக மாறி உள்ளது. 6 நாட்களுக்கு முன்புதான் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது கடந்த 1 வாரமாக வலிமை அடைந்து வருகிறது.

அதிதீவிர புயலாக உருவாகும் இந்த புயலுக்கு மோச்சா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நர்கிஸ் சூறாவளி, தெற்காசியாவில் இயற்கை பேரழிவுகளில் ஏற்பட்ட பெரிய புயல்களில் ஒன்றாக இப்போதும் பார்க்கப்படுகிறது, அந்த புயலை போலவே தற்போது உருவாகி வரும் மோச்சா புயலும் உள்ளது.
வடசென்னையில் ஊமை வெயில் அடித்துக்கொண்டு இருக்கிறது. மீனம்பாக்கத்தில் வெயில் 39 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை தாண்டும் வாய்ப்புகள் உள்ளன. இது மியான்மரை 175 கிமீ வேகத்தில் தாக்கும் என்று கூறப்படுகிறது.
வெதர்மேன்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளையில் இருந்து வெயில் அதிகரிக்கும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அவர் செய்துள்ள போஸ்டில், இந்த மாதத்தின் மிகவும் வெயிலான நாள் இன்றுதான் தொடங்குகிறது. இந்த வருடம் இதுவரை அவ்வளவு வெயில் இல்லாத நல்ல மாதமாக இருந்தது. நாளை கண்டிப்பாக மீனம்பாக்கத்தில் வெயில் 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும்.
நுங்கம்பாக்கத்தில் 40 டிகிரி செல்ஸியஸ் நாளை ஏற்படும். கேரளா, குமரி, மதுரை மற்றும் பிற தென் தமிழக மாவட்டங்களில் இன்று கொஞ்சம் மிதமான மழை பெய்யக்கூடும். மேக இழுப்பு காரணமாக மழை பெய்யும். இது பலத்த / காற்று வீசும்.
மோச்சா புயல் வலிமை அடைந்து வருகிறது. அதற்கு இப்போது கண் வந்துவிட்டது ( புயலின் மையம்) என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வானிலை மையம்
வங்கக்கடலில் உருவாகி வரும் மோச்சா புயல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து மியான்மர் நோக்கி செல்கிறது.
இதனால் தமிழ்நாட்டில் புயல் தாக்காது. அதே சமயம் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மேகங்களை இது இழுத்து செல்லும். இதனால் தமிழ்நாட்டிற்கு கோடை மழை முற்றிலுமாக குறைந்து வெயில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இயல்பான வெயிலை விட 2-3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
தற்போது தமிழ்நாட்டில் 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உள்ளது. இது 41ஐ அடையும் வாய்ப்புகள் உள்ளன. இதன் அர்த்தம் வரும் நாட்களில் வெப்பம் கொளுத்த போகிறது.
வலிமை அடைகிறது
பொதுவாக ஒரு தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும்.
ஆனா வங்கக்கடலில் தற்போது 36 டிகிரி செல்சியசுக்கும் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. அதனால் இந்த புயல் கண்டிப்பாக அதி தீவிர புயலாக உருவாகும். அதோடு மிக மிக வலிமையான புயலாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலில் உருவாகி வரும் மோச்சா புயல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து மியான்மர் நோக்கி செல்கிறது.












Click it and Unblock the Notifications