தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும்? எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? முழு ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று எங்கெங்கு மழை பெய்யும், வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மேற்கு பள்ளத்தாக்கு காற்று காரணமாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு நோக்கி வர வாய்ப்பு குறைவாக உள்ளது. இதனால் தமிழ்நாடு நோக்கி வர வேண்டிய மேகங்களும் இதுவரை வரவில்லை. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

தமிழ்நாடு மழை

தமிழ்நாடு மழை

இதனால் தமிழ்நாட்டிற்கு இதுவரை எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. நேற்று மாலையே டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை தோன்றி இருக்க வேண்டும். ஆனால் மேற்கு பள்ளத்தாக்கு காரணமாக இன்னும் மழை தொடங்கவில்லை. காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவரை தர வேண்டிய மழையை தரவில்லை. டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு கனமழை பெய்யவில்லை.

வானிலை

வானிலை

இதனால் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 23ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நிலவரம் என்ன?

நிலவரம் என்ன?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலைக்கு பின்பே ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் என்று அளவில் இருக்கும். அதேபோல் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் இன்று பெரிதாக எங்கும் மழை பெய்யாது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அரபிக்கடலில் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம். நாளை மற்றும் நாளை மறுநாள் குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

காற்று வீசும்

காற்று வீசும்

அதேபோல் 24ம் தேதி மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். . இதனால் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் அரபிக்கடலில் அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+