16 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகும் கனமழை.. சென்னையில் அடுத்த 7 நாள் என்ன நிலவரம்.. முழுவிபரம்
சென்னை: தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், சென்னையில் அடுத்த 48 மணிநேர நிலவரம் என்ன? என்பது பற்றியும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 7 நாள் நிலவரம் என்ன என்பது பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. இந்நிலையில் தான் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். இது டிசம்பர் 8ல் வடதமிழகம் - புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

16 மாவட்டங்களுக்கு கனமழை
இந்நிலையில் தான் தமிழகத்தில் நிலவும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து கூறி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரளா வரை நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய உள்ளது.

எந்தெந்த மாவட்டங்கள்
மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சென்னை வானிலை நிலவரத்தை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணிநேரங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

சென்னை 7 நாள் நிலவரம் என்ன?
மேலும் சென்னையில் அடுத்த 7 நாள் நிலவும் வானிலை பற்றி சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று சென்னையை பொறுத்தமட்டில் வானம் ஓரளவு மேகமூட்டடத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை டிசம்பர் 5ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 6ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அன்றைய தினம் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது

டிசம்பர் 7 முதல் டிசம்பர் 10 நிலவரம்
மேலும் சென்னையில் டிசம்பர் 7 ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர் 8 ம் தேதி மேகமூட்டம் இருக்கும். அதோடு இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர் 9 ம் தேதி வானம் மேகமூட்டடத்துக்கும் காணப்படும். அன்றைய தினம் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர் 10 ம் தேதி வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications