ஒருவழியாக.. தமிழ்நாட்டிற்கு முக்கிய நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்.. என்ன தெரியுமா?
சென்னை: சென்னையில் இன்று நிலவும் வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக தீவிரமாக அதிகரித்து வந்த வெயிலுக்கு இடையில் அவ்வப்போது திடீரென மழை பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெறுகிறது.
திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளிலும், மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்கிறது.

இப்படி சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீரென லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்கிறது. ஆனாலும் பகல் நேரங்களில் வெயில் சகிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது.
கடந்த மாதம் 24ம் தேதியோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. அதோடு 25ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்பின் ஜூன் 4ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்தது. ஆனால் இன்று வரை வெப்ப அலையும் முடியவில்லை. தென்மேற்கு பருவமழையும் தொடங்கவில்லை. வெயிலும் குறையவில்லை.
மாறாக, தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையாக அவதிக்கு உள்ளாக்கியது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
வெதர்மேன்: இந்த நிலையில்தான், சென்னையில் இன்று நிலவும் வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், வட தமிழ்நாட்டின் வெப்பம் 40 டிகிரி செல்சியஸுடன் தொடர்கிறது. வேலூரில் வெப்பம் உயர்ந்து உள்ளது. பெரிய இடைவெளிக்கு பின் மீனம்பாக்கத்தை மிஞ்சி வெப்பநிலை பதிவாகி முதல் இடத்தை பிடித்துள்ளது. பருவமழை தொடங்குவதால், காற்றின் திசை மாற்றத்தை நாம் காண்போம். காற்று வடமேற்கில் இருந்து தென் கிழக்கு பகுதிக்கு மாறலாம். மேலும் வடக்கு தமிழ்நாட்டில் வெப்பநிலையும் திங்கட்கிழமை முதல் குறையும்.
அங்கே வெப்பநிலை 38 டிகிரி செல்ஸியஸ் வரை குறையக்கூடும். இது கிட்டத்தட்ட சமாளிக்க கூடிய வெப்பநிலைதான்.

தமிழ்நாட்டில் நேற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது
வேலூர் - 41.8 டிகிரி செல்சியஸ்
திருத்தணி 41.1 டிகிரி செல்சியஸ்
மீனா - 40.7 டிகிரி செல்சியஸ்
தாம்பரம் 40.7 டிகிரி செல்சியஸ்
பொத்தேரி - 40.6 டிகிரி செல்சியஸ்
திரூர், திருவள்ளூர் - 40.5 டிகிரி செல்சியஸ்
கிண்டி - 40.2 டிகிரி செல்சியஸ்
நுங்கா - 40.1 டிகிரி செல்சியஸ்
மற்றவைகள்
எம்ஆர்சி நகர் - 39.6 டிகிரி செல்சியஸ்
வானகரம் - 39.6 டிகிரி செல்சியஸ்
தரமணி - 39.6 டிகிரி செல்சியஸ்
மதுரை நகரம் - 39.6 டிகிரி செல்சியஸ்
மதுரை விமான நிலையம் -39.6 டிகிரி செல்சியஸ்
சிதம்பரம், கடலூர் - 39.6 டிகிரி செல்சியஸ்
தூத்துக்குடி - 39.5 டிகிரி செல்சியஸ்
கரூர் - 39.5 டிகிரி செல்சியஸ்
கேரளாவிலும் இன்று பரவலாக கனமழை பெய்யும். காஞ்சிபுரம் அருகே காணப்படும் தீவிர மழை மேகங்கள் மறைமலைநகர், செங்கல்பட்டு மற்றும் ECR வரை நகரக்கூடும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications