ஆக்டிவ் நவம்பர்! தமிழ்நாட்டிற்கு சூப்பர் நாள்! இங்கெல்லாம் ஹாட் ஸ்பாட்! தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கிறது. முக்கியமாக சென்னையில் கனமழை விளாசிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார்.
அவர் செய்துள்ள போஸ்டில், தமிழ்நாட்டிற்கு இது சிறப்பான நாளாக இருக்க போகிறது. குறைந்தபட்சம் 15-2- மிமீ மழை கூடுதலாக பெய்ய போகிறது. ஒரே நாளில் இவ்வளவு மழை இன்று வடகிழக்கு பருவமழை கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

வெதர்மேன் போஸ்ட்: தமிழ்நாட்டில் இன்று முக்கியமான மாவட்டங்கள் மழைக்கான ஹாட் ஸ்பாட்டாக இருக்க போகின்றன. சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, தீனே, திண்டி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெங்களூரு, திருப்பத்தூர், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகள் மழைக்கான ஹாட் ஸ்பாட்டாக இருக்க போகின்றன
மேடன்-ஜூலியன் அலைவு தற்போது phase 2 ல் இருந்து phase 8க்கு மாறி மாறி சென்று கொண்டு இருக்கிறது. தற்போது மீண்டும் phase 2 ல் உள்ளது. phase 2 என்பது இது நல்ல மழைக்கு சாதகமான சூழ்நிலை ஆகும். இதனால் இந்த நவம்பர் மாதம் ஆக்டிவாக இருக்க போகிறது. அதேபோல் டிசம்பர் மாதத்தின் முதல் பாதியும் இப்படித்தான் இருக்க போகிறது.
( 10 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது.. மஞ்சள் அலர்ட் தந்த வானிலை மையம்.. ரொம்ப முக்கியம்! )
தற்போது இருக்கும் சிஸ்டம் அரேபியன் கடலை நோக்கி நகர்ந்து கொண்டு இருகிறது. இது விரைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும், என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
வானிலை மழை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை இந்திய வானிலை மையம் மூலம் விடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி திருப்பத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று காலை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை மையம்: இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், 1. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேடுக்கு சுழற்சி நிலவுகிறது.
2. தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
05.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் டி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம். தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
06.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications