371 kA ஆ.. சென்னையில் இப்படி பார்த்ததே இல்லை.. தமிழ்நாடு வெதர்மேனையே அதிர வைத்த வானிலை சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று திடீரென இடி, மின்னல் அடித்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான போஸ்ட் ஒன்றை செய்துள்ளார்.

சென்னையில் பெய்து வரும் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முன்பே எச்சரிக்கை விடுத்து இருந்தார். கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அவர் செய்த போஸ்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் வெள்ளி (கடந்த வெள்ளி ) வெப்பநிலை மிக மோசமாக இருக்க போகிறது. இங்கே 41-42 டிகிரி செல்ஸியஸ் ஆக இருக்கும். இரவு 11-3 மணி வரை முற்றிலும் தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்லுங்கள். இல்லையென்றால் வெளியே செல்ல வேண்டாம்.

Tamil Nadu Weatherman shocked due to the 371 kA lightning in the Chennai amid rain

இந்த கடைசி 2 நாட்களுக்கு (வெள்ளி மற்றும் சனி) பயங்கர வெப்பமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை முதல் குறைந்த வெப்பநிலை நிலவும். வறண்ட ஜூன் மாதத்தில் கூட இயற்கை நமக்கு ஏராளமான மழையைத் தரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பயங்கரமான வெப்ப நாட்கள் எப்போதும் நல்ல மழையுடன் முடிவடையும். ஜூலை 2015 வெப்ப நாட்களில் இதைப் பார்த்தோம்.

இந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னையின் வெப்ப நாட்கள் முடிவுக்கு வரும். ஜூன் மாதம் சென்னைக்கு ஒன்றும் வலுவான மழை மாதம் அல்ல, ஜூன் மாதத்தில் சராசரியாக 50+மிமீ மட்டுமே மழை பெய்யும். இந்த மாதம் சராசரியை விட இரண்டு மடங்கு நல்ல மழை பெய்யக்கூடும் வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் செய்த போஸ்டில், நாளை மற்றும் அடுத்த 2 நாட்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னைக்கு - நாளை காலை எழுந்தவுடன் நல்ல வானிலை இருக்கும். கடல் ஓரத்தில் இருந்து அப்படியே மேகங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும், லேசான மழை மற்றும் தூறல் நிலவும், எவ்வளவு நாட்களாக இப்படி ஒரு காட்சியை நாம் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தோம்.. இப்போது நடக்க போகிறது என்று கூறினார்.

அவர் சொன்னபடியே இன்று சென்னையில் மழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது.

அதிகாலையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து வெதர்மேன் செய்துள்ள போஸ்டில், உங்கள் ஜன்னல் / பால்கனியில் இருந்து அழகான மழை காட்சியை ரசியுங்கள். உடனே பஜ்ஜி / டீ / காபியுடன் தயாராகுங்கள், இளையராஜா பாடல்களை தயாராக வையுங்கள். மழை பெய்ய போகிறது.. எனவே உங்கள் வாகனங்களை கழுவ வேண்டாம். அதே சமயம் குடை / ரெயின்கோட் இல்லாமல் வெளியே செல்ல மறக்காதீர்கள் என்று கூறினார்.

இடி மின்னல்: கனமழைக்கு இடையே சென்னையில் இன்று திடீரென இடி, மின்னல் அடித்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான போஸ்ட் ஒன்றை செய்துள்ளார்.

இது தொடர்பாக போஸ்ட் செய்த அவர்.. சென்னையில் இதற்கு முன் இப்படி ஒரு வலிமையான மின்னலை பார்த்ததே இல்லை. 371 kA அளவிற்கு மின்னல் அடித்துள்ளது, என்று வியப்பாக குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+