"பர்ஃபெக்ட்".. இந்த மாவட்டங்கள்தான் ஹாட் ஸ்பாட்.. "பல்ஸ்" பார்த்து சொன்ன வெதர்மேன்.. எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மழை தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வேகமாக வலுவடைந்து வருகிறது.

தற்போது இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையடுத்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

எங்கே இருக்கிறது

எங்கே இருக்கிறது

இந்த நிலையில் தமிழ்நாடு மழை தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது கிழக்கு வடகிழக்கு இலங்கை பகுதியில் உள்ளது. நமது கடல் பகுதியில் இருந்து இன்னும் தாழ்வு பகுதி தூரத்தில்தான் இருக்கிறது. தற்போது கடலோர மாவட்டங்களில் நல்ல கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறையில் தற்போது நல்ல கனமழை பெய்து வருகிறது. இன்று டெல்டா முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்டாக இருக்கும். அருகில் உள்ள மாவட்டங்களான விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.

உள்மாவட்டங்கள்

உள்மாவட்டங்கள்

இந்த தாழ்வு பகுதி நாகை கடலோர பகுதியை நோக்கி நகரும் போது, காற்று உள் மாவட்டங்களை நோக்கி செல்லும். அந்த நேரத்தில்தான் உள்மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். அதுவரை அந்த மாவட்டங்களில் லேசான மழையே பெய்யும். தற்போது உள்ள காற்று அடிப்படையில் மழை கடலோர மாவட்டங்களில் மட்டுமே பெய்யும். அதனால் மேற்கு, தெற்கு மற்றும் உள் மாவட்ட மக்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு லேசான மழையே இன்று பெய்யும்.

கேரளா

கேரளா

இந்த தாழ்வு பகுதி அரபிக்கடலை நோக்கி ஒரு பல்ஸை நகர்த்தும். இதனால் கேரள கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு தீவிரம் அடைந்து, பின்னர் நகர்ந்து உள்ளது. இதன் காரணமாக நமக்கு 13 மற்றும் 14ம் நாட்களில் உள் மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை முதல் நாள் 6-9 செமீ அளவிற்கு சிட்டியில் பல இடங்களில் மழை பெய்து உள்ளது. 11-14ம் தேதி வரை 30 செமீ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

 மழை அளவு

மழை அளவு

இன்னும் 3 நாட்கள் இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் இன்னும் கனமழை பெய்யும். அப்போதுதான் டார்கெட்டை மழை தொடும். சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பிரேக் எடுத்து பிரேக் எடுத்து பெய்யும். இரவு நேரங்களில் எப்போதும் போல மழை தீவிரமாக பெய்யும். மழையின் தீவிரம் மாறும். பகலிலும் திடீரென தீவிர கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது சென்னையில் இருந்து பல நூறு கிமீகள் தூரத்தில்தான் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+