அந்த 30 நிமிடம்! டெல்லியிலிருந்து ஆளுநர் ரவி வந்ததும்..சட்டென பார்த்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
சென்னை: டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய ஆளுநர் ஆர். என் ரவியை, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர். ஆர். என் ரவிக்கும் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆளுநருக்கு எதிராக புகார்களை அடுக்கி முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு கடிதம் அனுப்பி உள்ளார். ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவர் கடிதம் எழுதி உள்ளார்.

இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி சமீபத்தில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். 5 நாள் பயணமாக அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தனியாக ஆளுநர் ஆர். என் ரவி பேசினார்.
அமித் ஷா மற்றும் ஆளுநர் ரவி ஆகியோரின் சந்திப்பில் அரசியலமைப்பின் 355-வது சட்டப்பிரிவு அலசப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 355-வது பிரிவு என்பது அசெம்ப்ளியை சஸ்பெண்ட் செய்வது குறித்து பேசுகிறது.
பேரவையை முடக்கி வைக்க வேண்டுமானால் ஜீரணிக்க முடியாத சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இருக்க வேண்டும். அல்லது மாநிலத்தில் அசாதாரணமான சூழல் இருக்க வேண்டும். செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியது, இலாகா இல்லாத அமைச்சராக தொடர அனுமதிக்காதது உள்ளிட்ட பிரச்சனைகளை முதல்வர் ஸ்டாலினுக்கும் கவர்னர் ரவிக்குமான மோதல்கள் உச்சக்கட்டத்தில் இருந்தது.
செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைப்பதாக கவர்னர் எழுதிய கடிதத்தை அடுத்து சட்ட சர்ச்சைகளும் உருவெடுத்தன. இந்த நிலையில்தான், 6 நாள் பயணமாக டெல்லி சென்ற கவர்னர் ரவி, அமித் சாவை சந்தித்தார். அந்த சந்திப்பில், தமிழக அரசு குறித்து நிறைய விசயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையை பெற்றப்பிறகே செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி கவர்னர் உத்தரவிட்டார் என்பதால் நீக்கம் குறித்து இந்த சந்திப்பில் பெரிதாக விவாதிக்கப்படவில்லை. ஆனால், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக இருப்பதை அழுத்தமாக வாதிட்டுள்ளார் கவர்னர். 355-வது பிரிவை பயன்படுத்தி மாநில சட்டப் பேரவையை சஸ்பெண்ட் (முடக்கம்) செய்யலாம் என கவர்னர் ஆலோசனை செய்ததாக தகவல்கள் வருகின்றன.
இன்னொரு பக்கம் முதல்வர் ஸ்டாலினும் ஆளுநருக்கு எதிராக காய் நகர்த்தினார். அதன்படி ஆளுநருக்கு எதிராக புகார்களை அடுக்கி முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு கடிதம் அனுப்பி உள்ளார். ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவர் கடிதம் எழுதி உள்ளார்.
இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி இன்று காலை தமிழ்நாடு திரும்பினார். நாளை தமிழ்நாடு வர வேண்டிய ஆளுநர் ஆர். என் ரவி இன்றே தமிழ்நாடு திரும்பினார். டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய ஆளுநர் ஆர். என் ரவியை, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்துள்ளது.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது. ஆனாலும் இவர்கள் 30 நிமிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தனர். இரண்டு பேருமே ஆட்சிப்பணி பின்னணி கொண்டவர்கள் என்பதால் அது தொடர்பாக பழைய கதைகள், அனுபவங்கள், தமிழ்நாடு ஆட்சி நிலவரம் பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications