தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.2.78 லட்சம்- தேசிய சராசரியை விட மிக அதிகம்- பொருளாதார ஆய்வறிக்கை
சென்னை: இந்தியாவின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 11.90% பங்களிப்பு அளிக்கிறது; தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.2.78 இலட்சம் (2022-23); இந்தியாவின் தேசிய சராசரி - ரூ.1.69 இலட்சம்; ஆகையால் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் என்பது தேசிய சராசரி தனிநபர்
வருமானத்தை விட 1.64 மடங்கு அதிகம் என்று தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-25-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று வெளியிடப்பட்டது.இந்த திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருப்பவர் பொருளியல் ஆய்வறிஞர் முனைவர் ஜெயரஞ்சன். தமிழ்நாட்டில் முதல் முறையாக இத்தகைய பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
1. கொரோனா பெருந்தொற்று, உலகளாவிய சவால்களை எதிர்கொண்ட தமிழ்நாடு, 2021-22இலிருந்தே 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து எட்டி வருகிறது 2024-25இல் 8% அல்லது அதற்கு மேல் வளர்ச்சியை தொடரும்.
2. இந்தியாவின் GDPயில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 9.21%
3. இந்தியளவில் வாகன உதிரிப்பாகங்கள், ஜவுளி, தோல் பொருள்கள் ஆகியவற்றின் முக்கிய ஏற்றுமதி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
4.தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.2.78 இலட்சம் (2022-23)
தேசிய சராசரி - ரூ.1.69 இலட்சம், தேசிய சராசரியை விட 1.64 மடங்கு அதிகம்.
5. மற்ற மாநிலங்களை போலன்றி, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பெருநகரங்களைத் தாண்டி, மாவட்டங்களிலும் பரவியுள்ளது.
6. சேவைத் துறை 53.63%, உற்பத்தித் துறை 33.37%, விவசாயம் 13% பங்களிப்பு வழங்குகின்றன.
7. 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய திட்டமிடல்.
8. தமிழ்நாட்டில் 2019-20'ல் 6% என்றிருந்த நகர்ப்புறப் பணவீக்கம் 2024-25'ல் 4.5% ஆகக் குறைந்துள்ளது.
9. நகர்ப்புற பணவீக்கம் 4.5% ஆகவும் கிராமப்புறத்தில் 5.4% ஆகவும் உள்ளது.
10. தமிழக அரசு, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
11. தமிழ்நாட்டின் (ஜி.எஸ்.வி.ஏ.வில்) விவசாயம் 6% பங்களிப்பை அளித்துள்ளது.
12. 2019-20இல் மொத்தப் பயிர்ப் பரப்பில் 32.1% ஆக இருந்த நெல்லின் பங்கு 2023-24இல் 34.4% ஆக அதிகரித்துள்ளது.
13. தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு வழங்கும் கடன் ரூ.1.83 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.58 லட்சம் கோடியாக உயர்வு.
14. தோட்டக்கலை துறை 16.3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவை எட்டியது.
15. . தமிழ்நாட்டின் (ஜி.எஸ்.வி.ஏ.வில்) கால்நடைத்துறை 5.41% பங்களிப்பை அளித்துள்ளது.
16. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 11.90% பங்களிப்பு அளிக்கிறது.
17. MSME தொழில்களில் தமிழ்நாடு, தேசிய அளவில் இரண்டாம் இடம்.
18. 2024 முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு, 14.55 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கம்.
19. வெளிநாட்டு நேரடி முதலீடு ரூ.20,157 கோடியாக உயர்வு.
20. தமிழ்நாட்டின் நகர்ப்புறப் பணியாளர்களில் 54.63% பேர் சேவைத் துறையில் பணிபுரிகின்றனர். இது தேசிய சராசரியான 58.07%க்கு அருகில் உள்ளது.
21. 2021-22 மற்றும் 2023-24க்கு இடையில், உற்பத்தித் துறை 8.33% ஆகவும், கட்டுமானத் துறை 9.03% ஆகவும் வளர்ச்சியடைந்துள்ளது.
22. தமிழ்நாட்டின் கடன்-வைப்பு விகிதம் (CDR) 117.7%, இந்திய சராசரி 79.6%.
23. நாட்டில் அதிகமான ATMகளை (24,390) கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
24. தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு பங்கேற்பு விகிதம் 64.6%, தேசிய சராசரி 64.3%.
25. பல்வேறு சமூகக் குறியீடுகளில், தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.
26. மொத்த மாணவர் பதிவு (ஜிஇஆர்)ல் இந்தியாவை விட தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
27. மருத்துவச் சுற்றுலாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
28. நாட்டிலயே சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளது.
29. நீடித்த வளர்ச்சிக்கான SDG குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
30. பல்வேறு சுகாதாரக் குறியீடுகளிலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது.
31. காலநிலை மாற்றத்திற்கெதிரான திட்டங்களுக்காக ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் பசுமை நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.
32. பசுமை உள்கட்டமைப்பு மற்றும் கடலோர பாதுகாப்பு மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
33. தமிழ்நாடு அதன் 2023-30 செயல்திட்டத்தின் வாயிலாகக் காலநிலை சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது
34. தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பசுமை ஆற்றல் துறையில் தமிழ்நாடு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
35. தமிழ்நாடு, இந்திய பொருளாதாரத்தில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழும்.












Click it and Unblock the Notifications