7 நாள் தான் டைம்.. தமிழில் பெயர்ப் பலகை வைக்கலைனா லைசென்ஸ் ரத்து! சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. உரிய பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்கவும், கடைகளின் உரிமத்தை தற்காலிமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் தலைநகராக சென்னை உள்ளது. இங்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. உலக அளவில் தொடங்கி உள்ளூர் கடைகள் வரை ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், கடைகள் சிறு வியாபார கடைகள், உணவகங்கள் என வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழில் அந்த நிறுவனங்கள் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் கடைகளில் பெயர் பலகைகளை ஆங்கிலத்திலேயே வைத்திருக்கின்றன.
இதை அடுத்து அவற்றை தமிழில் மாற்றி வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் அனைத்து கடைகளிலும் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டியது கட்டாயம் என்ற நிலையில், அவற்றை பின்பற்றாத கடைகள் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது.
தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கவும் தமிழ் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் குறித்து அந்தந்த பகுதி மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் டி நகர், பாரிமுனை, சவுகார்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழ் இல்லாமல் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மொழிகளில் பெரிதாக பெயர் பலகை வைத்துள்ளதாக தொடர் புகார்கள் வந்தது.
தற்போது சென்னையில் 70 ஆயிரம் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் 7 நாட்களுக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அந்த கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும், அபராதம் விதிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது மட்டும் அல்லாமல் கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் கடைகளின் பெயர் பலகையை கட்டாயம் தமிழில் வைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாநகராட்சி அதிகாரிகள் கூட்டம் நடத்தி தமிழில் பெயர்ப்பலகை வைக்க நோட்டீஸ் வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications