தமிழ் புத்தாண்டு.. சென்னையில் இருந்து 4 சிறப்பு ரயில்கள்.. தென் மாவட்ட பயணிகள் உடனே டிக்கெட்டை போடுங்க
சென்னை: தமிழ் புத்தாண்டு, கேரளாவில் விஷு புத்தாண்டையொட்டி தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து தென்காசிக்கும், சென்ட்ரலில் இருந்து கொல்லத்துக்கும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதேபோல, கேரளாவில் விஷு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கோடை விடுமுறை உள்ள நிலையில், தமிழ் புத்தாண்டு நாளினை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் மக்கள் விரும்புவார்கள்.

தெற்கு ரயில்வே அறிவிப்பு
இதனால், பயணிகள் முன்கூட்டியே ரயில், பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் முன்கூட்டியே புக்கிங் செய்ய தொடங்கினர். இதனால், தமிழ் புத்தாண்டு நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல கடைசி நேரத்தில் திட்டமிடும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது.
இதனால் ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவிக்குமா? என்ற எதிர்பர்ப்பு பயணிகள் மத்தியில் நிலவிய நிலையில், தென் மாவட்ட மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் விவரம் வருமாறு:-
தென்காசி, கொல்லத்திற்கு சிறப்பு ரயில்
* தென்காசியில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் தென்காசியில் இருந்து சென்னைக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
* சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்திற்கும் (வண்டி எண் 06119) சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வரும் 15 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பும். மறுமார்க்கத்தில் கொல்லத்தில் (வண்டி எண் 06120) இருந்து 16 ஆம் தேதி சென்னைக்கு ரயில் புறப்படுகிறது.
எழும்பூர் டூ திருவனந்தபுரம், தூத்துக்குடி
* ஏப்ரல் 13 சென்னை - தூத்துக்குடிக்கும், மறுநாள் ஏப்ரல் 14 ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஏப்ரல் 10 ல் எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஏப்ரல் 15 ல் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications