தமிழ் புத்தாண்டு-வார இறுதி! வந்தாச்சு லாங் லீவ்! ஊருக்கு போறீங்களா? தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ்
சென்னை: தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் மக்கள் பலரும் சொந்த ஊருக்கு கிளம்பி செல்ல தொடங்கி உள்ளனர். இன்று இரவு சொந்த ஒருக்கு செல்ல மக்கள் பலரும் பேருந்துகளை புக் செய்துள்ளனர்.
ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை வருகிறது. அதன்பின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வருகிறது.
பொதுவாக நீண்ட விடுமுறை வரும் போதெல்லாம் தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் விடப்படுவது வழக்கம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல் கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,183 பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இந்த நிலையில்தான் தற்போதும் சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன. அதேபோல் சென்னைக்கு திரும்ப பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த முறை பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி இன்று கோயம்பேட்டில் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. அதேபோல் ஞாயிறு இரவு மற்றும் திங்கள் கிழமை இந்த சிறப்பு பேருந்துகள் மற்ற நகரங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 22-ம் தேதி ரம்ஜான் பண்டிகை காரணமாக 21ம் தேதியும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக 500 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
நாளையில் இருந்து பல அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. சில அலுவலகங்களுக்கு இன்றில் இருந்தே விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. இதனால் பலர் நேற்று இரவே சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றனர். சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் இவர்கள் திரும்பி சென்றனர். இதனால் நேற்றே சென்னையில் தாம்பரம், பெருங்களத்தூர், காட்டாங்குளத்தூர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்றும் சிறப்பு பேருந்துகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் அதிக அளவில் சாலைகளில் பேருந்துகள் செல்லும். இதனால் இன்றும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தீபாவளிக்கு தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 4218 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. 3 நாட்களில் மொத்தமாக 16,888 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. இதில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு மட்டும் கூடுதலாக 3 நாட்களில் 10518 பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications