Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்
Tamil New Year Wishes in Tamil (தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்): தமிழர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான திருநாள்களில் ஒன்றாக தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தின் முதல் நாளில் வரும் இந்த நாள், ஒரு புதிய ஆரம்பத்தை நினைவூட்டுகிறது. பழையதை மறந்து, புதிய நம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடங்க வேண்டிய நேரம் இது.
இந்த நாளில் வீடுகள் முழுவதும் சுத்தம் செய்து, அழகான கோலங்கள் போட்டு, மலர்களால் அலங்கரித்து கொண்டாடுவது வழக்கம். குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவார்கள். "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிப்பது இந்த நாளின் சிறப்பாகும்.
அந்த இனிய தருணங்களை இன்னும் சிறப்பாக மாற்ற, உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்பக்கூடிய அழகான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள், கவிதைகள் மற்றும் மேற்கோள்களை இங்கே தொகுத்துள்ளோம். இந்த வாழ்த்துகள் உங்கள் உறவுகளை மேலும் நெருக்கமாக்கி, புத்தாண்டை மகிழ்ச்சியாக தொடங்க உதவும்.
Tamil New Year Wishes :
புதிதாய் பிறந்ததாய்
உள்ளம் நினைக்க
பூக்களின் வாசமாய்
நம்பிக்கை தெளிக்க
நல்லதொரு நாளாய்
தினமும் விடிய
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tamil New Year Wishes In Tamil:
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
எல்லோருடைய வாழ்விலும்
மகிழ்ச்சி நிலைக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tamil New Year Wishes 2026:
பனிபோல் விலகும் துன்பங்களை
நினைத்து துயரக்கடலில் மூழ்கிய
உங்களை கரை சேர்க்கும்
கலங்கரை விளக்காய் இந்த
புத்தாண்டு அமையட்டும்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tamil Puthandu Valthukkal:
பட்ட துன்பங்கள் எல்லாம்
இந்த புத்தாண்டில் பறந்து
போகட்டும் நினைத்த
நல்லது எல்லாம் மலரட்டும்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tamil New Year Wishes 2026 in Tamil:
விரும்பிய அனைத்தும் கிடைக்கப்பெற்று
சந்தோசமும் மன நிம்மதியும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்:
மதங்கள் அற்ற மாதம் பிறக்கட்டும்
சாதிகள் அற்ற சகாப்தம் பிறக்கட்டும்
பெண்ணையும் ஆணையும் சமமாய்
போற்றும் சரித்திர ஆண்டாய்
இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கட்டும்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2026:
இருளும் சோகமும் உங்களிடமிருந்து
விலகி இருக்க புதிய ஆண்டு
பிரகாசமும் நம்பிக்கையும்
நிறைந்ததாக இருக்கட்டும்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்:
திக்கெட்டும் அன்பு பொங்கிட
புது வருடமே வா
தித்திப்பாய் மகிழ்ச்சி தந்திட
புது வசந்தத்தை தா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2026:
இந்த சித்திரை திருநாள் உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளம் மற்றும்
வெற்றியை அள்ளித் தரட்டும்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!













Click it and Unblock the Notifications