சீமான், விஜயலட்சுமி வீடியோ.. காட்டிக் கொடுத்த "சீமான்" வலது கரம்.. வீடியோவில் வீரலட்சுமி 'திடுக்'
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் நடிகை விஜயலட்சுமியும் இருக்கும் வீடியோ தம்மிடம் இருப்பதாக சீமானின் வலது கரம் ஒருவர் தமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார் என வீடியோ பதிவில் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 2011-ம் ஆண்டு திருமண மோசடி புகார் கொடுத்திருந்தார். பின்னர் இந்த புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக் கொண்டார். ஆனால் கர்நாடகா சென்ற விஜயலட்சுமி, தொடர்ந்து சீமானுக்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

மீண்டும் சீமான் மீது புகார்: பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை வந்து மீண்டும் சீமான் மீது திருமண மோசடி, கருக்கலைப்பு உள்ளிட்ட ஏராளமான புகார்களை போலீசில் தெரிவித்தார். அப்போது நடிகை விஜயலட்சுமிக்கு தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி ஆதரவாக இருந்தார். நடிகை விஜயலட்சுமியை தமது கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தார்.
வீரலட்சுமி vs விஜயலட்சுமி: இந்த புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி மருத்துவ பரிசோதனை நடத்தினர். மேலும் சீமானுக்கும் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் திடீரென விஜயலட்சும் மீண்டும் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு பெங்களூர் திரும்பினார். அப்போது, வீரலட்சுமி தம்மை சித்ரவதை செய்ததாக குற்றம்சாட்டினார் விஜயலட்சுமி.

வீரலட்சுமி vs நாம் தமிழர் கட்சி: இதனையடுத்து நாம் தமிழர் கட்சியினருக்கும் வீரலட்சுமி தரப்புக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல்கள் நடைபெற்று வருகின்றன. வீரலட்சுமிக்கு எதிராக சீமானும், சீமானுக்கு எதிராக வீரலட்சுமியும் மான நஷ்ட ஈடு வழக்கு நோட்டீஸ் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

சீமான், விஜயலட்சுமி வீடியோ: தற்போது வீரலட்சுமி புதிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு மிக நெருக்கமான, சீமானுடனே இருக்கக் கூடிய ஒருநபர்தான் தம்மிடம் தொலைபேசியில் பேசுவதாகவும் சீமானும் விஜயலட்சுமியும் இருக்கும் வீடியோ தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்தார் என குறிப்பிட்டு அந்த மர்ம நபர் பேசும் போன் உரையாடல் ஒலிப்பதிவையும் வீரலட்சுமி இணைத்துள்ளார்.
திமுக பின்னணியா?: அத்துடன், இப்படி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், சீமானுக்கு நெருக்கமானவர்கள் கொடுக்கும் தரவுகள் அடிப்படையில் தாம் போலீசில் புகார் கொடுத்தால் எனக்குப் பின்னால் திமுக இருக்கிறது என நாம் தமிழர் கட்சியினர் திசை திருப்புவதாகவும் வீரலட்சுமி அதில் குற்றம்சாட்டி இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications