சூப்பர்.. இனி அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்.. தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு!!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ உள்பட அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குனர் நாகராஜ் முருகன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ உள்பட பல தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் புறக்கணிக்கப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவது உண்டு. மேலும் தமிழ்நாட்டில் பள்ளிகள் வைத்து கொண்டு தமிழ் மொழியை பள்ளிகள் புறக்கணிப்பது வேதனையளிக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கூறினர்.

இதன் விளைவாக தமிழக பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலில் உள்ளது. அதன்படி கடந்த 2015-16ம் ஆண்டில் இருந்து அனைத்து வகையான பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2022-2023ம் கல்வியாண்டில் 8 ம்வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக அமலாகி உள்ளது.
இந்நிலையில் தான் வரும் கல்வியாண்டான 2023-2024ல் 9 ம்வகுப்பு வரையும், 2024-2025ல் 10ம் வகுப்பு வரையும் தமிழ் கட்டாயமாகிறது. இந்நிலையில் தான் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும்(சிஇஓ) தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குனர் நாகராஜ முருகன் சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛மாநில பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமின்றி தமிழகத்தில் இயங்கும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் பொதுத்தேர்விலும் தமிழை ஒரு தேர்வாக கட்டாயம் எழுத வேண்டும். இதற்கான தேர்வுமுறை மற்றும் பாடத்திட்டங்கள் விரைவில் உருவாக்கப்படும்.
எனவே அனைத்து தனியார் பள்ளிகளும் இதற்கு தயாராக வேண்டும். தமிழ் கற்றுக்கொடுக்க தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தமிழ் கட்டாய பாடமுறை குறித்த அறிவிப்பை தனியார் பள்ளிகள் கடைப்பிடிப்பதை மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications