திடீருன்னு டிவிய பார்த்தா.. பாவாடை, ஜாக்கெட் மட்டும்தான்.. நெளிய வைக்கிறாங்களே.. லாக்டவுன் அட்டகாசம்
சென்னை: லாக்டவுன்.. மொத்த குடும்பமும் வீட்டுக்குள்.. பிரபல சேனலில் ஒரு பழைய சீரியலை வைக்கச் சொல்கிறார் அம்மா. மற்றொரு பக்கம், அப்பா உட்கார்ந்துகொண்டு அந்த நியூஸ் சேனலை வைப்பா, என்கிறார்.
ஓடிக்கொண்டிருப்பதோ, ஒரு 24 மணி நேர மியூசிக் சேனல். ஆளாளுக்கு அடுத்து எந்த சேனலை மாற்றலாம் என டிவியை உற்று பார்த்துக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு இளம்பெண் உள்பாவாடையுடன் தோன்றி, அங்கேயும், இங்கேயும் நடக்கிறார். படுக்கிறார், குளிக்கிறார், கீழே பாவாடை, மேலே ஜாக்கெட்.. அவ்வளவுதான் அவரது மொத்த ஆடையும்.

டோட்டல் குடும்பமும் அப்படியே ஷாக் ஆகிறது. இது ஏதோ ஒரு வீடு இரு வீட்டு சம்பவம் அல்ல. தமிழகத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கடந்த சில நாட்களில் ஒரு நாளில் எப்போவாவது ஒருமுறையாவது இந்த ஷாக்கை அனுபவித்திருப்பார்கள்.
இது ஏதோ ஆணுறை விளம்பரமோ, அல்லது பாலியல் மருத்துவரின் புரோகிராமுக்கு, போடப்படும் முன்னோட்டமோ கிடையாது. பாவாடை நிறுவனத்தின் விளம்பரம்.
"என்னதான் பாவாடை விளம்பரமாக இருந்தாலும், ஒரு நியாயம் வேண்டாமா.." என்று மைன்ட் வாய்ஸ் சொல்லுவதை தவிர்க்க முடிவதில்லை.
முன்பாவது, இல்லத்தரசிகள் மட்டும் வீட்டில் இருப்பார்கள். குழந்தைகள் பள்ளிகளுக்கும், ஆண்கள் வேலைகளுக்கு வெளியேயும் சென்றிருப்பார்கள். இப்போது வேறு வழியின்றி, பாட்டி, தாத்தா முதல், பேரன் பேத்தி வரை ஒன்றாக ஒரே டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது இப்படியான காட்சிகள் வருவது, நெளிய வைத்து விடுகிறது.
சிறுவர்கள் பார்க்க முடியாத அளவுக்கான காட்சிகளை இரவு 11 மணிக்கு மேல் ஒளிபரப்பலாம் என்பது நெறிமுறை. ஆனால் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்பதை காரணம் காட்டி பட்டப்பகலில் பாவாடை விளம்பரம் இப்படி பட்டவர்த்தனமாக வருவது தவிர்க்கப்படலாம்தான்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications