வடகிழக்கு பருவமழை சூப்பர் தொடக்கம்.. இன்று மாலை வரை சென்னையில் டமால் டுமீல் மழை.. வெதர்மேன்
சென்னை: சென்னையில் இன்று மாலை வரை நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று முதல் தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
நள்ளிரவு முதல் பெய்ய தொடங்கிய மழை இன்னும் பல இடங்களில் நிற்காமல் விட்டு விட்டு பெய்து வருகிறது.

வெப்பச்சலனம்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பிளாக் பக்கத்தில் கூறுகையில், தமிழகம் அருகே வளி மண்டல மேலடுக்கு சுழற்சியிலிருந்து ஈரப்பதம் கொண்ட காற்று வறண்ட காற்றுடன் இணையும் போது வெப்பச்சலனத்தால் டமால் டுமீல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஈரப்பதம்
இன்று நாள் முழுவதும் வெப்பச்சலனம் அப்படியே இருக்கும். அதனால் இன்று மாலை வரை விட்டு விட்டு மழை பெய்யும் என்பதை எதிர்பார்க்கலாம். வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. அதே நேரத்தில் வறண்ட காற்றும் ஈரப்பதத்துடன் கூடிய காற்றும் இணைந்து சென்னையில் கனமழையை கொடுக்கும்.

பூந்தமல்லி
அது போல் ராமநாதபுரம், தூத்துக்குடியிலும் நல்ல மழை பெய்துள்ளது. மெரினாவில் அதிகபட்சமாக 178 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 139 மி.மீ.மழையும், செங்குன்றம் பகுதியில் 128 மி.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 127 மி.மீ மழையும் குறைந்தபட்சமாக பூந்தமல்லியில் 30 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

சூரன்குடி
அது போல் தூத்துக்குடியில் சூரன்குடியில் 106 மி.மீ மழையும், ராமேஸ்வரத்தில் 102 மி.மீ. மழையும் விருதுநகரில் 30 மி.மீ. மழையும் பெய்துள்ளது.சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளது. எனவே இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஆரம்பமே அசத்தலாக இருக்கும் என தெரிகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications