கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன்
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சமீபத்தில் விலகினார். இந்நிலையில் தான் பண்ருட்டி சட்டசபை தொகுதியில் நான் நிற்கப்போவது இல்லை. பண்ருட்டி மட்டுமின்றி வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று திடீரென்று அறிவித்துள்ளார். மேலும் அதற்கான காரணத்தையும் அவர் விளக்கி உள்ளார். அதில் திமுக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கலங்கியபடி பேசியுள்ளார். மேலும் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் போட்டியிட்டு வென்றார். இந்த முறை கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:
அவமானப்படுத்திய திமுகவினர்
''நாம் சட்டமன்றத்தில் சந்தித்த இன்னல்கள், பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்பதை உணர்ந்த நீங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்ட வேல்முருகன் தான் தேர்தல் காலத்தில் ஒட்டுமொத்த ஊடகங்களும் யார் யாருடன் கூட்டணி சேர்கிறார்கள்? யார் யார் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறார்கள்? என்று பரபரப்பான செய்திக்காக காத்திருக்கின்றன.
ஆக இந்த சூழலில் கடலூர் மாவட்ட செயற்குழு, பொதுக்குழு, ஒன்றிய, மாவட்ட அளவிலான கூட்டங்களில் முன்னணி அமைச்சர்களையே வைத்து கொண்டு என்னை குறித்தும், எப்போதும் பார்த்தாலும் கூட்டணிக்கு (பண்ருட்டி தொகுதி) தந்து விடுகிறீர்கள்? நாங்கள் எப்போது எம்எல்ஏ ஆவது? என்று திமுக பிரமுகர்கள் பேசினர். கடலூர் மாவட்ட 2 அமைச்சர்கள் முன்னிலையிலும், கடலூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக வந்த கேஎன் நேரு இருக்கும் மேடைகளிலும் பேசினார்கள்.
வருத்தப்பட்ட வேல்முருகன்
மூத்த அமைச்சர்களாக இருந்தாலும் கூட கூட்டணி கட்சி தலைவரை அப்படி விமர்சனம் செய்யக்கூடாது? இது முறையல்ல? தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு ஆகிறது? பத்திரிகையாளர்கள் உள்ளனர்? என்று கண்டிக்கவில்லை. அப்போது வருத்தம் ஏற்பட்டது. அதேபோல் எனது சட்டசபை தொகுதிக்கு மக்களுக்காக திட்டங்கள் கொண்டு வரும்போது அதனை கேவலம் கமிஷன் தொகைக்காக சில திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டனர்.
அரசு விழா மேடைகளை ஆக்கிரமித்த சம்பவம், ஒரு விழாவில் கோட்டாச்சியரையே அமரவிடாமல் ஒன்றிய செயலாளர் அவரை எழும்பி செல்லும்படி கூறியது என இதுபோன்ற அரசு விழாக்களில் தலையீட்டு பொங்கல் பரிசு, உதவித்தொகைகளை அறிவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். பெரியண்ணன் மனப்பான்மையில் ஆளும் கட்சியியின் கடைநிலை நிர்வாகிகள் முதல் மேல்நிலை நிர்வாகிகள் வரை நடந்து கொண்ட வருத்தம்.
தேர்தலில் போட்டியில்லை
இதையெல்லாம் கருத்தில் கொண்டு நான் பண்ருட்டி நிர்வாகிகளை அழைத்து பேசினேன். இனி பண்ருட்டி தொகுதியில் நிற்கப்போவது இல்லை என்று கூறினேன். பண்ருட்டி தொகுதி மட்டும் இல்லாமல் வரும் சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்தமாக நான் விடுபட்டு கட்சிக்கு உழைத்த முன்னணி தலைவர்களுக்கு வாய்ப்பை வழங்குகிறேன்.
மீண்டும் பண்ருட்டியில் இடம் கொடுத்தால் கூட கட்சியின் மூத்த தலைவர்களை நிறுத்துகிறேன். நான் தமிழ்நாடு முழுவதும் கட்சி பணிகளை மேற்கொள்ள இருக்கிறேன். இதற்காக அனைவரும் பொறுத்து கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கூட்டத்தை ஏற்பாடு செய்ய நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறேன்'' என்றார்.
-
10 நாள்தான் டைம்! வீடு வீடாக போய் ஓட்டு கேளுங்க! நீலாங்கரை வீட்டுக்குள் இருந்தபடியே விஜய் அறிவுரை -
செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில்.. தவெக வேட்பாளருக்கு புது சிக்கல்.. இதை கவனிச்சீங்களா.. போச்சே -
உண்மையான காங்கிரஸ் விஜய் பக்கமா.. அப்போ போலியான காங்கிரஸ் யார்? ப.சிதம்பரம் பதில்! -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
புஸ்ஸி ஆனந்த் முதல் ஆதவ் வரை.. விஜயால் மோசம்போன வேட்பாளர்கள்.. தவெகவில் கடும் அதிருப்தி -
கன்னியாகுமரியில் இன்று விஜய் அதிரடி! மதியம் 2 மணிக்கு தொடங்கும் மெகா பிரசாரம்.. ரூட் மேப் இதோ -
விசில் ஊதிக்கொண்டு சைக்கிளில் ரவுண்ட் அடித்த விஜய்.. தடுப்புகளை உடைத்துக்கொண்டு வந்த தவெக தொண்டர்கள் -
குடும்பத்தை பார்க்காதவர் எப்படி மக்களை பார்ப்பார்..சுத்து போட்ட மக்கள்..தெறித்து ஓடிய தவெக வேட்பாளர் -
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெல்வாரா? வெறும் 20 பேர்தானாமே! குஷியில் இனிகோ இருதயராஜ்! -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
விஜய் அட்டைக்கத்தி.. காற்றடித்தால் கதை முடிஞ்சுது.. திருச்சி கிழக்கில் உதயநிதி தக் -
என்ன இன்னைக்கு ரொம்ப ஜாம் ஆகுது! சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்! அடுத்து ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications