Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெயரை கூட எழுதி வைத்து படிக்கிறாரே விஜய்.. போட்டோவை லீக் செய்த கருப்பு ஆடு.. கடுப்பான தவெக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் சமீபத்தில் விஜய் பேசிய விஷயங்கள் சில சர்ச்சையானது. இந்த நிலையில் அவர் பேசியது அனைத்தையும் எழுதி வைத்து பேசியதும் கூட சர்ச்சையானது.

அவர் பெரிய ஏ4 ஷீட்டில் பேச வேண்டிய ஒவ்வொரு வார்த்தைகளையும் எழுதி வைத்து பேசியது சர்ச்சையானது. அதோடு தனது பெயர் வரும் இடங்களை கூட அவர் எழுதி வைத்து படித்தார். அவரின் இந்த செயல் சர்ச்சையாகி உள்ளது. அதிலும் சில இடங்களில் எந்த ரியாக்சன் கொடுக்க வேண்டும்.. எங்கே நிறுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

TVK Manadu Vijay Madurai TVK

லீக்கான போட்டோ - விஜய் அப்செட்

அவர் இப்படி எழுதி வைத்து படித்தது லீக்காகி உள்ளது. மேடையில் இருந்த தவெக நிர்வாகி இதை புகைப்படம் எடுத்து லீக் செய்துள்ளார். விஜய் தரப்பை இந்த விவகாரம் ஏகத்திற்கும் கடுப்பாக்கி உள்ளதாம். கூடவே இருந்து புகைப்படம் எடுத்து யாரோ லீக் செய்து உள்ளார்கள் என்று விஜய் தரப்பு கடுப்பாகி உள்ளதாம். யார் அந்த கருப்பு ஆடு என்பது தமிழக வெற்றிக் கழகம் உள்ளே பேச்சாக எழுந்து உள்ளதாம்.

விஜய் தனது பேச்சில், சிங்கம் எப்போதும் தனித்துவமானது - சிங்கம் கர்ஜித்தால் எல்லா திசையும் அதிரும். சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது. சிங்கம் தன்னைவிட பெரிய எதிரியைத்தான் மோதி வீழ்த்தும். சிங்கம் தனியாவும் வரும், கூட்டமாகவும் வரும், தனியா வந்தாலும் சிங்கம்தான் ராஜா. அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தால் மட்டும்தான் இருக்கிறார் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். இந்தக் கூட்டம் வெறும் ஓட்டாக மட்டும் இல்லாமல் வரப்போகும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சிக்கு நாம் வைக்கப்போகும் வேட்டா, நம்மை கோட்டைக்கு அனுப்பப்போகும் ரூட்டா இருக்கப்போகிறது.

TVK Manadu Vijay Madurai TVK

விஜயகாந்த் பற்றி விஜய் பேச்சு

என்னுடைய அண்ணன் புரட்சி தலைவர் விஜயகாந்த் உடன் பழகி இருக்கிறேன், அவரும் இந்த மதுரையை சேர்ந்தவர்தான், அவரை மறக்க முடியுமா. தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது, நாங்கள் எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம், எல்லா கூக்குரலையும் சிரிப்போடு கடந்து வந்துள்ளோம். சினிமாவிலும் அரசியலிலும் என் தலைவர் எம்ஜிஆர்; எம்ஜிஆர் போன்ற குணம் கொண்டவர் அண்ணன் விஜயகாந்த்

நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள், மாநாடு நடத்த மாட்டேன் என்றார்கள், இப்போ பாருங்க, என் கூட இருப்பவர்களே நான் வர மாட்டேன் என்றார்கள், நான் ஆட்சியை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரலை , விஜய் எப்படி வருவார் என்று சொன்னார்கள், நான் வந்துவிட்டேன். அவர் வரவில்லை அதனால் நீங்கள் வர மாட்டீர்கள் என்றார்கள்.. இதோ வந்துவிட்டேன்.

TVK Manadu Vijay Madurai TVK

பாஜக - திமுக மீது அட்டாக்

எங்களுடைய ஒரே கொள்கை எதிரி பாஜகதான், ஒரே அரசியல் எதிரி திமுகதான், மாற்றமே இல்லை. டீலிங் போட்டு, கூட்டணி வச்சு அரசியல் செய்யும் கட்சி நாங்கள் இல்லை. நாங்கள் ஒன்று உலக மகா ஊழல் கட்சியும் இல்லை, பாஜக உடன் மறைமுக டீலிங் செய்யும் பாசிச கட்சியும் இல்லை. தவெக கையில் எடுத்துள்ள அரசியல், உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல், நல்ல அரசியல், நல்லது மட்டுமே செய்யும் அரசியல். 2026ல் தவெக - திமுக இடையில்தான் போட்டியே, வேறு போட்டியே இங்கே இல்லை.

கூட்டணி வைக்கலாம்.. கூட்டணி வச்சு தப்பிச்சிக்கலாம் என்று திமுக நினைக்கிறது, அது நடக்காது. இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யும் ஆட்சி பாஜக ஆட்சி. நீட் தேர்வால் நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. மோடிக்கு கேள்விகளை கேட்க வந்துள்ளேன். இதுதான் நீங்கள் நடத்தும் ஆட்சியா? செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜீ அவர்களே? மக்கள் சக்தியே இல்லாத ஊழல் கட்சிகளை மிரட்டி அடிபணியவைத்து, 2029 வரை சொகுசு பயணம் போகலாம்னு நினைக்கிறீங்களா ஜீ? என்னதான் நேரடி, மறைமுக கூட்டம் வைத்தாலும் தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க? என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+