ராகுல் காந்தியை பார்க்க.. நேரம் கேட்ட விஜய்.. திமுக கூட்டணியை உடைக்க மாஸ்டர் பிளான்? என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன. விரைவில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

congress

விஜயின் அரசியல் நகர்வுகள்: முக்கிய சந்திப்புகள்

விஜய் அரசியல் களத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தலுக்கு தயாராகும் நோக்கில், பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். ராகுல் காந்தியுடனான சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம், தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிப்பதாகும். முக்கியமாக திமுக - காங்கிரஸ் கூட்டணியை உடைப்பதற்கான திட்டம் இது என்றும் கூறுகிறார்கள்.

விஜய், தனது அரசியல் கட்சியின் மூலம் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூட்டணி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால், அரசியல் கட்சிகளிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இந்த மீட்டிங்கிற்கு முதலில் ராகுல் காந்தி ஒப்புக்கொள்ள வேண்டும்.

இந்த மீட்டிங் நடந்தால் அது திமுகவை கடுமையாக அப்செட்டாகும் என்பதால், ராகுல் காந்தி இந்த மீட்டிங்கிற்கு ஒப்புக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ் சீனியர்கள் திமுக மீது கோபம்

காங்கிரஸ் கட்சியில் சில சீனியர்கள் மட்டும், 'கட்சி அழிஞ்சிக்கிட்டு இருக்கு. காங்கிரஸ் வளரணும்னா திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வரவேண்டும். அது மட்டுமல்ல, கூட்டணி ஆட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம், அதிமுக தயாராக இருக்கிறது. அந்த கட்சியுடன் நாம் கூட்டணி வைத்தால் ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு கிடைக்கும். 50, 60 ஆண்டுகாலமாக அரசியல் அதிகாரம் காங்கிரஸுக்கு கிடைக்கவே இல்லை. அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டுமானால் தமிழக வெற்றிக் கழகம் அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைப்பது அவசியம்.. அப்போதுதான் நமக்கு பதவி கிடைக்கும். நமக்கு அமைச்சர் பதவிகள் கிடைத்தால்தான் கட்சி வளரும் என்று, சில சீனியர்கள் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், மேலிட பொறுப்பாளரோ, கூட்டணி பத்தியெல்லாம் இப்போது பேசுவது தேவையற்ற பேச்சு. திமுகவுடன் கட்சி மேலிடத்துக்கு நல்ல நெருக்கம் இருக்கு. கூட்டணி பத்தியெல்லாம் அவர்கள் முடிவெடுத்துக் கொள்வார்கள்" என்று சீனியர்களிடம் சொல்லியிருக்கிறாராம்.

காங்கிரஸ் திமுக மோதல்

ஏற்கனவே திமுக - காங்கிரஸ் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. திமுக எம்பி திருச்சி சிவா நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது, கலைஞர் கருணாநிதி என்னை காரில் அழைத்து செல்வார். எனது 23, 24 வயதில் என்னிடம் அவர் கூறுவார். சில பேர் இதை நினைப்பாங்க, என்ன சின்ன பையனிடம் போய் சொல்கிறார் என்று.. ஆனால் அவருக்கு தெரியும்.. இதை போய் நான் கூட்டத்தில் பேசுவேன் என்று.. மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பேன் என்று தெரியும். அதனால் என்னிடம் நிறைய பேசுவார். அப்போது ஒரு நாள் காமராஜர் வந்து தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுக்க கண்டன கூட்டம் போடுறார். காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் அலர்ஜி வந்துவிடும். அதற்காக நான், அவர் தங்குகிற விடுதிகளில் எல்லாம் ஏசி வசதி செய்ய உத்தரவு கொடுத்தேன். ஆனால் என்னை எதிர்த்து தான் கூட்டம் போடுகிறார் என்று சொன்னார்.

இதேபோல், காமராஜரை அவசர காலத்தில் கைது செய்ய துடித்தனர். ஆனால் அது முடியவில்லை. அப்போது அவர் ஒரு நிகழ்ச்சிக்காக திருப்பதி போக இருந்தார். உடனே திமுகவின் தலைமையகத்தில் இருந்து அவருக்கு போன் சென்றது. தயவு செய்து நீங்க திருப்பதி போக வேண்டாம் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் அதற்கு நான் திமுக காரன் இல்லை. காங்கிரஸ்.. என்னை தடுக்க நீங்க யார்.. என்று குறிப்பிட்டார்.

விஜய் சந்திப்பு

இப்படிப்பட்ட நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தியைச் சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன. விரைவில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியதிலிருந்து, அவரது ஒவ்வொரு நகர்வும் கூர்மையாக கவனிக்கப்பட்டு வருகிறது. அவர், மக்களுக்கு என்ன செய்திகளைச் சொல்ல வருகிறார், அவரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அனைவரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்த சந்திப்பு, அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும்.

ஆனால் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, எனக்கு இந்த மீட்டிங் பற்றி எதுவும் தெரியாது. எந்த தகவலும் வரவில்லை. உங்களுக்கு தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார். இதனால் உண்மையில் இருவருக்கும் இடையில் சந்திப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+