தவெக கொள்கை பாடல்.. என்னை ஏன் தேர்ந்தெடுத்தீங்கண்ணா? விஜயிடம் கேட்ட தெருக்குரல் அறிவு! பதிலை பாருங்க
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் கொள்கை பாடல் வெளியிடப்பட்ட நிலையில் தொண்டர்கள் அதற்கு பலத்த வரவேற்பு கொடுத்துள்ளனர். இந்நிலையில் கொள்கை பாடலை உருவாக்க தனக்கு வாய்ப்பளித்த நடிகர் விஜய்க்கு நன்றி கூறியுள்ளார் தெருக்குரல் அறிவு..
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு, விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் மாநாட்டு திடலில் குவிந்தனர்.

தொடர்ந்து ரசிகர்களின் உற்சாக ஆரவாரத்திற்கு இடையே நடிகர் விஜய் மாநாட்டு மேடையில் தோன்றினார். முதலில் சுதந்திர போராட்ட தியாகிகள், தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார் தவெக தலைவர் விஜய்.
தொடர்ந்து மேடையின் இருபுறமும் இருந்த நிர்வாகிகளை சந்தித்து பூங்கொத்தை பெற்றுக் கொண்ட அவர் தொடர்ந்து மாநாட்டு மேடையில் இருந்து இறுதி வரை அமைக்கப்பட்டிருந்த சிறப்பு நடைபாதையில் சென்று தொண்டர்களை சந்தித்தார்.
விஜயை பார்த்த உற்சாகத்தில் தமிழக வெற்றிக் கழக கட்சி தொண்டர்கள் துண்டுகளை வீசி எரிய அதனை பிடித்து தனது தோளில் போட்டுக்கொண்டு சிரித்த முகத்தோடு விஜய் சென்றார். இதை பார்த்து உற்சாகமடைந்த தொண்டர்கள் மேலும் துண்டுகளை வீசினர். துண்டுகளை ஒவ்வொன்றாக பிடித்து தனது தோளில் போட்டுக் கொண்டார். தொடர்ந்து விஜய் மேடைக்குச் சென்றதும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை விளக்க பாடல் ஒளிபரப்பப்பட்டது.

நடிகர் விஜய் மற்றும் தெருக்குரல் அறிவின் குரல்களோடு இந்த பாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இதோ” எனத் தொடங்கும் அந்த பாடல், புதியதோர் விதி ஒன்றை செய்வோம் என நினைவடைகிறது. சுமார் 4 நிமிடம் 22 நொடிகள் இந்த பாடல் ஒளிபரப்பானது.
திருவள்ளுவரின் குறளோடு, காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை வழிகாட்டியாக ஏற்று, சாதி மத பாகுபாடு இல்லாத, சமத்துவ சமுதாயக் கொள்கை அதாவது மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் உங்களுக்காக உழைக்க நான் வருகிறேன் என்று விஜய் அந்த பாடலின் இடையே பேசினார். தொடர்ந்து இந்த பாடல் யூட்யூப் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியானது. தொடர்ந்து அதனை லட்சக்கணக்கானோர் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் பாடலை உருவாக்கிய தெருக்குரல் அறிவையும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பாடலை உருவாக்க தனக்கு வாய்ப்பளித்த விஜய்க்கு நன்றி கூறியுள்ளார் தெருக்குரல் அறிவு. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், “என்னை எதற்காக தேர்ந்தெடுத்தீர்கள்” என்று விஜய் இடம் கேட்டேன்.. அதற்கு அவர், “ உன்னால் மட்டுமே முடியும்” என்றார். என்னை நம்பி தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பாடலை உருவாக்க வாய்ப்பு கொடுத்த விஜய் சாருக்கு நன்றி.. உங்களது குரலை பதிவு செய்தது எனது வாழ்வில் மறக்க முடியாத நினைவு. உங்கள் அரசியல் பயணம் வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications