விஜய்க்கு 90% ஆதரவு.. ரேஸில் முந்தும் தவெக! விஜய் தமிழகத்தை ஆள போவது உறுதி.. சீனியர் சொன்ன சீக்ரெட்!
ஈரோடு: 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களில் 90 சதவீத மக்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கிறார்கள் எனவும், 2026-ல் தமிழகத்தின் எதிர்காலத்தை ஆளப்போவது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் என்பது உறுதி என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சின்னமான விசில் சின்னத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசங்கங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்.

செங்கோட்டையன்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் வரும் காலத்தில் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதுதான் இன்று மக்களின் கனவாக உள்ளது. அந்த கனவை நிறைவேற்றும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் ஒரே கருத்தோடு தங்களது பணிகளைச் சிறப்பாக ஆற்றி வருகிறார்கள். குறிப்பாக, தலைவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெளிப்படுத்தும் கருத்து ஒன்றுதான்; 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களில் 90 சதவீத மக்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கத்தோடு இருக்கிறார்கள்.
விஜய்
அதன் அடிப்படையில் தான், தலைவரின் சுற்றுப்பயணம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளின் காரணமாக ஒரு குறிப்பிட்ட அளவிலான மக்களை மட்டுமே தற்போது சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. மற்றக் கட்சிகளுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான். தமிழகத்தை ஆண்ட இரு கட்சிகளும் மாற்றப்பட வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் உணர்வாக இருக்கிறது. அவர்கள் மக்கள் பணிகளைச் செம்மையாகச் செய்யவில்லை என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.
2026 சட்டசபை தேர்தல்
2026-ல் தமிழகத்தின் எதிர்காலத்தை ஆளப்போவது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்' என்பது உறுதி. மக்கள் சக்தியை எந்தவொரு சக்தியாலும் வீழ்த்த முடியாது என்பதை வரப்போகும் தேர்தல் நிரூபிக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கான பணிகளைத் தெளிவான திட்டமிடலுடன் மேற்கொள்வோம். இதுவரை ஆட்சியில் இருந்தவர்களால் கொடுக்க முடியாத தீர்வுகளை நாங்கள் வழங்குவோம்.
தேமுதிக திமுக கூட்டணி
தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. எந்த இயக்கமும் தங்களுக்கு விருப்பமான கூட்டணியில் சேருவது அவர்களின் உரிமை. "எங்கிருந்தாலும் வாழ்க" என்பதே எங்கள் நிலைப்பாடு. தமிழக வெற்றி கலகத்தை பொறுத்தவரையில் விஜய் எந்த கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்வார். தமிழக முதல்வர் மகளிர் உரிமைக்காக 5000 வழங்கியது, கோடைகால சிறப்பு தொகை அல்ல தேர்தல் கோடை காலமாக உள்ளது. அதனால் தான் நிதி வந்து கொண்டுள்ளது.
தவெக கூட்டணி
தமிழக வெற்றி கழகத்திற்கு கூட்டணி கட்சிகள் வருவது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒவ்வொரு கட்சியிலும் உள்ளவர்கள் 4-5 சீட்டுகள் கேட்கின்றனர், ஒருவருக்கு மட்டும் தான் கொடுக்கப் போகிறார்கள். செல்வாக்கு மிக்கவர்கள் ஒரு தொகுதியில் இரண்டு அல்லது மூன்று பேர் உள்ளனர். தற்போது வெளியே யார் வருகிறார் சேரப் போகிறார்கள் என்பது தெரியும். அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் வருவார்களா என்ற கேள்விக்கு பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தேர்தல் அறிக்கை
எதையும் வெளிப்படையாக பெயரை குறிப்பிட்டு சொல்ல முடியாது. அவ்வாறு பெயர்களை குறிப்பிட்டு சொல்லும் போது தடைகள் ஏற்படும். தேர்தல் அறிக்கை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆய்வு செய்து கொண்டுள்ளார், தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை தெளிவாக, மக்கள் எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்வதற்காக எதிர்கால தமிழகத்தை ஆளப்போகிற தேர்தல் அறிக்கையாக உருவாக்கிக் கொண்டுள்ளார். அது தமிழக மக்கள் வியக்கத்தக்க அளவிற்கு இருக்கும்" என்றார்.
-
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, "தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே"! அமைச்சர் குஷி -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன்












Click it and Unblock the Notifications