"தமிழக அரசு பஸ்களில் ரூ. 2000 நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும்.. ஆனால்.." வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: அரசு பஸ்களில் ரூ. 2000 நோட்டுகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கம் குறித்து அறிவிப்பைக் கடந்த 2016இல் வெளியிட்டார். அப்போது புழக்கத்தில் இருந்த 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
அப்போது சுமார் 85% இந்த நோட்டுகளே புழக்கத்தில் இருந்த நிலையில், பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. ரூபாய் நோட்டுகளை மாற்றப் பொதுமக்கள் வங்கிகளில் நிற்க வேண்டி இருந்தது.

இருப்பினும், அப்போது ரொக்கத்திற்குத் தட்டுப்பாடு இருந்ததால் நிலைமை சரியாகவே சுமார் 6 மாதங்கள் வரை கூட ஆனது. ரூபாய் நோட்டுகள்: அப்போது புதிதாக 2000, 500, 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இது ரொக்கத்திற்கான தட்டுப்படச் சமாளிக்க உதவியது. இருப்பினும், அதன் பின்னர் பெரும்பாலும் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதைக் குறைத்தே வந்தனர்.
அப்போதே மத்திய அரசு விரைவில் 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறலாம் என கூறப்பட்டது. இருப்பினும், அதை மத்திய அரசு மறுத்தே வந்தது. இந்தச் சூழலில் ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமான நோட்டாக தொடரும் என்ற போதிலும், வரும் செப். மாதத்திற்குள் நோட்டுகளை மாற்ற வேண்டும் என்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் நாளை முதல் தங்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியானது. அதேநேரம் மறுபுறம் ஆம்னி பேருந்துகள் தாங்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கத் தயாராக உள்ளதாக அறிவித்தனர்.

இந்தச் சூழலில் அரசு பஸ்களில் பயணிகள் தரும் ரூ 2,000 நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் பயணிகள் தவிர மற்றவர்கள் ரூ 2,000 நோட்டுகளை மாற்ற அனுமதியில்லை என போக்குவரத்து அறிவித்துள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications