Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் புதிய கட்சி; தமிழருவி சொன்ன செய்தி! தாக்குப் பிடிப்பாரா? பல்டி அடிப்பாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் அரசில் கட்சியை ஆதரிப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் தமிழருவி மணியன்.

விஜய் தொடங்கி உள்ள புதிய கட்சிக்குத் தமிழருவி மணியன் ஆதரவு தெரிவிப்பார் என்று ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது.

Tamilaruvi Manian has explained about Vijay joining the party

அக்கட்சியின் ஆலோசகராக அவர் அமர்த்தப்படலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். ரஜினியை நம்பி ஏமாந்தவர், விஜய்யை வைத்து அந்த இழப்பை ஈடு செய்வார் என்றும் சொல்கிறார்கள்.

சில மாதங்கள் முன்பே விஜய்யின் அரசியல் 'மூவ்' புத்திசாலித்தனமாக உள்ளது என்று பேசி இருந்தார் தமிழருவி.

இப்போது அதிகாரப்பூர்வமாகக் கட்சியின் பெயரையே அறிவித்துவிட்டார் விஜய். ஆகவே ஆதரவு தருவாரா? விஜய் பக்கம் செல்வாரா? அதற்கு விளக்கம் அளித்துள்ளார் தமிழருவி மணியன்.

Tamilaruvi Manian has explained about Vijay joining the party

"விஜய்க்குப் பின்னால் இருந்து யாரோ ஒரு அறிவாளி இயக்குகிறார். அது நிச்சயமாகப் புரிகிறது. அப்படித்தான் அவரது ஒவ்வொரு அடியையும் அவர் எடுத்து வைக்கிறார்.

தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் மேல் பட்டியலின மக்கள் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலின மக்களின் வாக்குகளை வென்று எடுக்க வேண்டும் என்று விஜய் நினைக்கிறார்.

அதற்காகத்தான் தமிழ்நாடு முழுவதும் தனது ரசிகர் மன்றத்தை வைத்துக் கொண்டு அம்பேத்கர் பிறந்தநாளை அதற்காகத்தான் கொண்டாடுகிறார். அதைப் போல் இஸ்லாமிய வாக்குகளைக் குறிவைத்து ரம்ஜான் நோம்பு திறப்பு விழாவில் கலந்துகொள்ள ரசிகர்களை ஊக்குவிக்கச் செய்கிறார்.

Tamilaruvi Manian has explained about Vijay joining the party

காமராஜர் போல் கல்வியில் ஈடுபாடுக் காட்ட வேண்டும் என்பதால் படிப்பகத்தை உருவாக்கி வழிநடத்தச் சொல்கிறார். ஐஏஎஸ் கனவில் உள்ள மாணவர்கள் படிப்பதற்காக நூலகங்களைத் திறந்து வைக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

இந்தத் திட்டங்கள் எல்லாம் விஜய்யின் மூளையில் தானாக உதித்த திட்டங்கள் என நம்ப முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு இல்லாத எதிர்ப்பா? 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தைத் திரையரங்கிற்குக் கொண்டு வந்து காட்டுவதற்கே எவ்வளவு பாடுபட்டார் அவர் தெரியுமா? இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி அவர் ஆட்சிக்கு வந்து அமரக் கூடிய தெளிவு எம்.ஜி.ஆரிடம் இருந்தது. அந்தத் தெளிவு விஜய்யிடம் உள்ளதா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.

Tamilaruvi Manian has explained about Vijay joining the party

என்னைப் பொறுத்தவரை ஒரு விசயத்தில் தெளிவாக இருக்கிறேன். நான் இனிமேல் நடிகர்களை நம்புவதாக இல்லை.

நான் காங்கிரஸ் கட்சியிலிருந்தபோதே செல்வாக்கு மிக்கதாகச் சிவாஜி ரசிகர் மன்றம் இருந்தது. அதன் தலைவராகச் சின்ன அண்ணாமலை இருந்தார். அவர் சிவாஜி ரசிகன் என்ற பத்திரிகை நடத்தி வந்தார். அதற்குத் துணை ஆசிரியராக இருக்க என்னை அழைத்தார்.

அவரிடம், 'காமராஜரைப் பார்த்து அரசியலுக்கு வந்தவன் நான். என்னால் ஒரு நடிகருக்கு ரசிகராக இருக்க முடியாது' என்று சொன்னவன் நான். இதையே ரஜினிகாந்த்திடமே நான் சொன்னேன்.

Tamilaruvi Manian has explained about Vijay joining the party

நான் சிவாஜியை ஏற்றுக்கொள்ளாதவன். எம்ஜிஆரை ஏற்றுக்கொள்ளாதவன். ரஜினி 'சிஸ்டம் கெட்டு விட்டது' என்றார். அதற்காக அவரிடம் சென்றேன். இனியும் எந்த நடிகரையும் நான் நம்பிப் போவதாக இல்லை. அப்படிப் போனால் எனக்கு மூளை கெட்டு விட்டது. அதை கீழ்ப்பாக்கத்தில் வைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றுதான் பொருள்" என்கிறார்.

ஆனால், மணியன் செல்லமாட்டார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆறு மாதங்கள் முன்பு 'விஜய் அரசியல் ஆசைப்படுவதே தவறு' என்றார். 'சினிமா புகழை வைத்து முதல்வர் கனவு காண்கிறார்கள்' என்று ஒட்டுமொத்த நடிகர்களையும் விமர்சித்தார்.

இப்போது விஜய் பின்னால் யாரோ அறிவாளி இருப்பதாகச் சொல்கிறார். இவரே பின் சென்றாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அவரது ட்ராக் ரெக்கார்ட் அதையே சொல்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+